Latest Updates
-
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாக மாறப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம்
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
Rice Flour Face Packs In Tamil: நமது சமையலறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு அரிசி மாவு. இந்த அரிசி மாவு கொண்டு பலவிதமான சுவையான சமையலை செய்யலாம். அதே வேளையில் இந்த அரிசி மாவு கொண்டு சரும அழகையும் மேம்படுத்தலாம் என்பது தெரியுமா? ஆம், எப்படி கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கிறோமோ, அதேப் போல் அரிசி மாவைக் கொண்டும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கலாம்.

ஏனெனில் இந்த மாவில் முதுமையைத் தடுக்கும் பண்புகளும், எண்ணெயை உறிஞ்சும் பல்வேறு காரணிகளும் உள்ளன. இந்த மாவைக் கொண்டு பராமரிப்பு கொடுக்கும் போது, அது சருமத்தைப் பொலிவாக்குவது, முகப்பருக்களை தடுப்பது, கரும்புள்ளிகளை போக்குவது மற்றும் கருமையை நீக்குவது உள்ளிட்ட பல அழகு நன்மைகளை வழங்கும். இப்படிப்பட்ட அரிசி மாவைக் கொண்டு எப்படியெல்லாம் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து இப்போது காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 8-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் அரிசி மாவு, சிறிது சாக்லேட் பவுடர் மற்றும் குளிர்ச்சியான பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் கூட பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
