Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்..
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
Rajasthani Malai Pyaaz Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் சைடு டிஷ் செய்ய முடிவெடுப்பது சிரமமாக உள்ளதா? அப்படியே சைடு டிஷ் செய்தாலும், ஒரே சைடு டிஷ் செய்கிறீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ராஜஸ்தானி சைடு டிஷ் செய்யுங்கள். இதற்கு வீட்டில் 4 வெங்காயம் இருந்தால் போதும், அருமையான மலாய் பியாஸ் செய்யலாம். இந்த சைடு டிஷ் பன்னீர் மசாலாவின் சுவைக்கு இணையான சுவையில் இருப்பதால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த ராஜஸ்தானி மலாய் பியாஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜஸ்தானி மலாய் பியாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 ஸ்பூன்
* வெங்காயம் - 4
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 150 மிலி
* கசூரி மெத்தி - 2 ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, லேசாக பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து தீயைக் குறைத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்
தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, 1-2 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் மாங்காய் தூள், கசூரி மெத்தி, கொத்தமல்லி ஆகியவற்றை
சேர்த்து நன்கு கிளறி குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான ராஜஸ்தானி மலாய் பியாஸ் தயார்.



Click it and Unblock the Notifications
