Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
இந்திய ரூபாயானது உலகளவில் மிகவும் வலிமை வாய்ந்த நாணயங்களில் ஒன்றாகும். இந்திய ரூபாயின் வரலாறு என்பது பல்வேறு வடிவமைப்புக்கள், குறியீடுகள் மற்றும் உருவங்கள் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் வடிவமைப்பில் செய்யப்பட்ட ஒவ்வொரு மாற்றமும் அந்தந்தக் காலத்தின் சமூக-அரசியல் சூழலைப் பிரதிபலிக்கின்றன.

இந்திய ரூபாய்களில் மகாத்மா காந்தியின் உருவம் முதன்முதலில் இடம்பெற்றதிலிருந்து, அவ்வப்போது அவரின் புகைப்படத்தை மாற்றுவதற்கான கோரிக்கைகள் எழுந்தபோதிலும், மகாத்மாவின் புகைப்படம் இந்திய ரூபாயின் நிலையான மாற்றமுடியாத அடையாளமாகத் தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்திய நாணயத்தில் காந்தியின் உருவம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இடம்பெறும் நிலை எவ்வாறு உருவானது? மேலும், இந்திய ரூபாயில் அச்சடிப்பதற்காக பரிசீலிக்கப்பட்ட பிற தலைவர்கள் யார்? இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் காகிதப் பணத்தின் தோற்றம்
இந்தியாவில் காகிதப் பணத்தின் பயன்பாடு 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொடங்கியது. இந்தக் காலகட்டம் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி மற்றும் காலனித்துவ ஆட்சியின் எழுச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு நிறைந்த காலகட்டமாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் (RBI) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, கிழக்கிந்திய கம்பெனியின் தீவிரமான விரிவாக்க நடவடிக்கைகளால் வங்காளத்தில் தங்கம் மற்றும் வெள்ளிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில், கடன் நெருக்கடியைத் தவிர்க்கும் நோக்கில் பிரிட்டிஷ் அதிகாரிகள் பணத்தாள்களை அறிமுகப்படுத்தினர்.
முதல் காகிதப் பணத்தில் இருந்தது யார்?
1861-இல் உருவாக்கப்பட்ட காகித நாணயச் சட்டத்தைத் தொடர்ந்து, விக்டோரியா மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்தியாவின் முதல் காகித நாணயங்களும் உலோக நாணயங்களும் வெளியிடப்பட்டன. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மதிப்பிலான காகித பணங்கள் வெளியிடப்படுவதற்கு வழிவகுத்தது. இதில் 1923-இல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் கொண்ட ரூபாயும், 1936-இல் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் கொண்ட ரூபாய்களும் அடங்கும்.
சுந்தந்திரத்திற்கு பிறகு இந்திய ரூபாயில் ஏற்பட்ட மாற்றம்
1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சில ஆண்டுகள் சுதந்திரத்திற்கு முந்தைய நாணய முறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டது. பின்னர், 1950-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-அன்றுதான், புதிதாக உருவான இந்தியக் குடியரசு தனது தனித்துவமான நாணயத்தை வெளியிட்டது. இந்த ஆரம்பகால பணத்தில் அசோகத் தூண் இடம்பெற்றிருந்தது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தியின் உருவம், அவரது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக 1969-ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்திய ரூபாயில் இடம்பெற்றது. காலப்போக்கில், நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் தியாகம் ஆகிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், அவரது உருவம் இந்திய ரூபாய் நோட்டுகளின் அடையாளமாகவே மாறியது.
இந்திய ரூபாயில் அச்சிட பரிசீலிக்கப்பட்ட பிற தலைவர்கள் யார்?
இந்திய ரூபாயின் முகமாக மகாத்மா காந்தி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், பிற முக்கிய தலைவர்களின் படங்களையும் அதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் அவ்வப்போது எழுந்துள்ளன. நோபல் பரிசு பெற்றவரும், தேசியக் கவிஞருமான ரவீந்திரநாத் தாகூர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், செழிப்பு மற்றும் தெய்வீக அருளைக் குறிக்கும் வகையில் விநாயகர் மற்றும் லட்சுமி போன்ற தெய்வங்களின் உருவங்களை ரூபாயில் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
காந்தியின் புகைப்படம் நிலைபெற்றிருக்க காரணம் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்திய ரூபாயில் காந்தியின் உருவம் இடம்பெறுவதை நாட்டின் கொள்கைகளின் பிரதிபலிப்பாகக் கருதி, அதனைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வந்துள்ளது. இந்த பரிந்துரைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் 2016-இல் கூறுகையில், காந்தியின் உருவத்தைத் தக்கவைக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் காலத்திலேயே ஒரு குழு முடிவு செய்திருந்ததாகத் தெரிவித்தார்.
சிறப்பு பணத்தில் அச்சிடப்பட்டவர்கள்
இந்திய ரூபாய் தாள்களில் காந்தியின் உருவம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும், பல்வேறு மைல்கற்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமைகள் மற்றும் நிகழ்வுகளைக் கொண்டாடும் வகையில் இந்திய அரசு பல ஆண்டுகளாகப் பல்வேறு நினைவு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளது. உதாரணமாக, 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் (RBI) பிளாட்டினம் விழா, ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் மற்றும் பிரகதீஸ்வரர் கோயிலின் 1000-வது ஆண்டு நிறைவு ஆகியவற்றைக் கௌரவிக்கும் விதமாக 75 ரூபாய், 150 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் வெளியிடப்பட்டன. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாள் நினைவாக 125 ரூபாய் நாணயம் போன்ற சிறப்புப் பதிப்பு நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications
