உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..

Face Packs To Remove Darkness Around Mouth: முகத்தின் மற்ற பகுதிகளை விட வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருமையாக இருப்பது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான மற்றும் கவலைக்குரிய பிரச்சனையாகும். இப்படி ஒருவருக்கு ஏற்படுவதற்கு காரணம், சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகமாக இருப்பது, அதிகப்படியான சூரிய ஒளி, அழகு சாதன பொருட்களின் பயன்பாடு, சில சரும பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி வாய்ப் பகுதி மட்டும் கருமையாக இருந்தால், அது முகத்தின் தோற்றத்தையே மந்தமாக வெளிக்காட்டும்.

Top 7 Face Packs To Remove Darkness Around Mouth At Home

உங்களுக்கும் இப்படி வாயைச் சுற்றி கருப்பாக உள்ளதா? இப்படியிருக்கும் கருமையை இயற்கை வழியில் குறைக்க வேண்டுமா? அப்படியானால் நம் வீட்டு சமையலறையிலேயே ஏராளமான பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு தொடர்ச்சியாக ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அந்த கருமையை குறைக்கலாம். இருப்பினும், இந்த ஃபேஸ் பேக்குகள் கருமையை உடனடியாக நீக்கிவிடும் என்று உறுதியாக கூற முடியாது.

இப்போது வாயைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம். இந்த ஃபேஸ் பேக்குகளை, குறிப்பாக எலுமிச்சை கலந்த ஃபேஸ் பேக்குகளை முகத்தில் பயன்படுத்தும் முன் கையில் பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

1. அரிசி மாவு, தயிர், தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் வாயைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வர, ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

3. கற்றாழை ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால், வாயைச் சுற்றியுள்ள கருமை மறைவதைக் காணலாம்.

4. உருளைக்கிழங்கு

* உருளைக்கிழங்கில் உள்ள நொதி பொருள், கருமையைப் போக்கும் ஆற்றல் கொண்டது. இப்படிப்பட்ட உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுருண்டை பயன்படுத்தி முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் என தொடர்ந்து 4-6 வாரங்கள் பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை முகத்தில் காணலாம்.

5. கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், வாயைச் சுற்றியுள்ள கருமை மங்குவதைக் காணலாம்.

6. பப்பாளி பேக்

* பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை உள்ளன. இவை சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும்.
* இப்படிப்பட்ட பப்பாளியை நன்கு மசித்து அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

7. எலுமிச்சை பேக்

எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் ஆற்றல் கொண்டது. ஏனெனில் இதில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது கருமையைப் போக்குவதோடு, அந்த கருமை மீண்டும் வராமல் தடுக்க உதவுகிறது.
* இப்படிப்பட்ட எலுமிச்சையின் சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

Story first published: Thursday, September 17, 2026, 18:04 [IST]
Desktop Bottom Promotion