Latest Updates
-
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்..
Budhaditya Rajyog 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், மாதந்தோறும் ராசியை மாற்றுவார். அந்த வகையில் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்தார். அப்போது அந்த கன்னி ராசியில் ஏற்கனவே கிரகங்களின் இளவரசனாகவும், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படும் புதன் பயணித்து வருகிறார்.

முக்கியமாக இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியில் சூரியன் நுழையும் போது புதனும் இருப்பதால், அந்த ராசியில் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. அதுவும் இந்த ராஜயோகமானது செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். அதன் பின் புதன் துலாம் ராசிக்குள் நுழைவார்.
இப்படி உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் இந்த ராசிக்காரர்கள் தங்களின் திறமையின் அடிப்படையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இப்போது புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். புதிய திறன்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்து, ஊடகம், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திறமையான பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமாக, லாபத்தைத் தரக்கூடியதாக இருக்கும். இருந்தாலும் பேசும் போது சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை, முடிவெடுக்கும் திறன், ஆளுமை போன்றவை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஊடகம், எழுத்து, ஐடி துறைகளை சேர்ந்தவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஆனால் எதற்கும் அளவுக்கு அதிகமாக சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயம், பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். நிதி முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். முக்கியமாக இந்த யோகத்தால் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்று பெறுவார்கள். அரசு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள், இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறலாம். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
