திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்

Posted By:

Nellai Style Poricha Kuzhambu Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் கஷ்டப்படாம டக்குனு சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ, கேரட் அல்லது பீன்ஸ் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து சூப்பரான திருநெல்வேலி ஸ்டைலில் பொரிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் பொரிச்ச குழம்பு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Nellai Style Poricha Kuzhambu Recipe How to Make at Home in Tamil

மேலும் இந்த நெல்லை ஸ்டைல் பொரிச்ச குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த குழம்பு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், பொரிச்ச குழம்பு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.

உங்களுக்கு நெல்லை ஸ்டைல் பொரிச்ச குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- துவரம் பருப்பு (வேகவைக்க) - 1/4 கப்
- காய்கறிகள் (சௌசௌ, கேரட், பீன்ஸ்) - 1/2 கப்
- ரசப் பொடி - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் - 2 ஸ்பூன்

ஊறவைத்து அரைக்க:

- துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
- தனியா - 1 ஸ்பூன்
- வர மிளகாய்- 3
- மிளகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- தேங்காய் - கால் கப்

தாளிக்க:

- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

- 1/4 கப் துவரம்பருப்பை குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பருப்பு நன்றாக வெந்து மசியும் பக்குவத்தில் இருக்க வேண்டும். இதை தனியே எடுத்து வைக்கவும்.

- 1 ஸ்பூன் துவரம்பருப்பு, மல்லி விதைகள், வர மிளகாய், மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயை ஊறவைக்க வேண்டாம்.

- 10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீரில் ஊறவைத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும். அதனுடன் கால் கப் தேங்காயைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்.

- உங்களுக்கு பிடித்த காய்கறிகளை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, காய்கறிகளைச் சேர்த்து அவை மென்மையாகும் வரை வேக வைக்கவும்.

- அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், ரசப் பொடி மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.

- பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்போது வேகவைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை இதனுடன் சேர்க்கவும். அவ்வப்போது கிளறிவிட்டவாறு 8 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.

- உங்களுக்குத் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- குழம்பு நன்கு கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவவும்.

- ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அதில் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கியதும், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

- தாளித்த இந்த கலவையை குழம்பின் மீது ஊற்றி நன்கு கிளறவும். அவ்வளவுதான் சுவையான நெல்லை ஸ்டைல் பொரிச்சக் குழம்பு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, September 18, 2026, 12:16 [IST]
Desktop Bottom Promotion