இந்தியாவில் நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாம் - காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் பொதுமக்களால் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு பொருள் இணைந்துள்ளது. இந்திய சமையலறைகளில் கடுகு எண்ணெய் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதோடு பாதுகாப்பானதாகவும், சில ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாகவும் கூடக் கருதப்படுகிறது.

Why Mustard Oil Is Banned in US

ஆனால், அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இதனைத் தடை செய்துள்ளதுடன், "வெளிப்புறப் பயன்பாட்டிற்கு மட்டுமே" என்று இதன் பயன்பாட்டைத் திட்டவட்டமாக தடைசெய்துள்ளது. பிரபலமான உணவுப்பொருளை அமெரிக்கா ஏன் தடைசெய்துள்ளது அதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் கடுகு எண்ணெய் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?

FDA-வின் கூற்றுப்படி, கடுகு எண்ணெயில் அதிக அளவில் 'எருசிக் அமிலம்' உள்ளது. பல்வேறு ஆய்வுகள் இந்த அமிலத்திற்கும் இதய நோய்களுக்கும் தொடர்பூ இருப்பதை உறுதிபடுத்தியுள்ளன. 1970-களில் எலிகள் மீது நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அதிக அளவிலான எருசிக் அமிலத்தை உட்கொள்வது இதயத் தசைகளில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும் என்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மருத்துவரீதியாக மயோகார்டியல் லிபிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் கடுகு எண்ணெயை சமையலுக்குப் பாதுகாப்பற்றதாகக் கருதி, உணவுப் பொருட்களில் அதைப் பயன்படுத்துவதைத் தடை செய்தன.

கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா?

FDA-வின் கூற்றுக்கு மாறாக, கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க இதய சங்கத்தின் படி, கடுகு எண்ணெயில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆகியவை சரியான விகிதத்தில் உள்ளன. இவை இதயத்துக்கு நன்மைப் பயக்கும் ஆரோக்கியமான கொழுப்புகளாகும். இது நல்ல கொழுப்பின்(HDL) அளவை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்கவும் உதவுவதன் மூலம் இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்குப் பதிலாக MUFA மற்றும் PUFA நிறைந்த எண்ணெய்களை உணவில் சேர்த்துக்கொள்வது, கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் இதய நோயைத் தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

கடுகு எண்ணெயில் உள்ள பிற ஆரோக்கிய நன்மைகள்

கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளும் உள்ளன; இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன. மிதமான அளவில் கடுகு எண்ணெயை உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கக்கூடும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் சிதையாதவாறு 'கோல்ட்-பிரஸ்' முறையில் தயாரிக்கப்படுவதால், மற்ற எண்ணெய்களை விட சமையலுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.

நிபுணர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள்

அமெரிக்காவில் கடுகு எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து விஞ்ஞானிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. 1970-களில் எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு, மனிதர்களுக்கு முழுமையாகப் பொருந்தாது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். ஏனெனில், அந்த எலிகளுக்கு மிக அதிக அளவிலான மருந்து கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் நுகர்வுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் கனோலா எண்ணெய், கடுகு எண்ணெயில் உள்ள எருசிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடுகு எண்ணெய் தடை அமெரிக்கர்களை பாதுகாத்துள்ளதா?

கடுகு எண்ணெய் மீதான தடை இருந்தபோதிலும், அமெரிக்காவில் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதயம் மற்றும் இரத்த நாள நோய்களின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அமெரிக்க இதயச் சங்கத்தின் தரவுகளின்படி, ஆண்டுதோறும் சுமார் 9,33,782 பேர் இதய நோய் தொடர்பான காரணங்களால் உயிரிழக்கின்றனர். நிறைவுற்ற கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவு முறையே அமெரிக்காவில் இதய நோய்களுக்கான முக்கிய காரணமாக அமைகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion