Latest Updates
-
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்!
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
நாம் தினமும் பார்க்கும் பல பொதுவான விஷயங்கள் ஏன் அப்படி இருக்கிறது என்பதற்கான காரணங்களை நாம் யோசிப்பதே இல்லை. அந்த வகையில் நம் அலுவலகம், வீடு, பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் மின்விசிறிகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம், மின்விசிறிகள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் மின்விசிறிகளில் ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா? பெரும்பாலான மின்விசிறிகளில் மூன்று இறக்கைகளே இருக்கும்.

நான்கு இறக்கைகள் அல்லது 5 இறக்கைகள் உள்ள மின்விசிறிகள் இருந்தாலும் அவரின் பயன்பாடு வெகு குறைவுதான். மூன்று இறக்கைகள் கொண்ட இந்த மின்விசிறியின் வடிவமைப்புக்குப் பின்னால் வலுவான அறிவியல் மற்றும் நடைமுறைக் காரணங்கள் இருப்பதாகப் பொறியாளர்களும், மின்விசிறி உற்பத்தியாளர்களும் கூறுகின்றனர். சிறந்த காற்றோட்டம் முதல் குறைந்த மின் நுகர்வு வரை, அன்றாடப் பயன்பாட்டிற்கு மிகவும் இந்த மூன்று இறக்கைகள் கொண்ட மின்விசிறி எப்படி சிறந்ததாக உள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த காற்றோட்டம்
காற்றை சரியாக சுழலச் செய்வதே மின்விசிறியின் முக்கியப் பணியாகும். நிபுணர்களின் கூற்றுப்படி செயல்பாடு மற்றும் மின்னாற்றல் பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையே மூன்று இறக்கைகள் சிறந்த சமநிலையை வழங்குகின்றன. குறைவான இறக்கைகள் இருக்கும்போது காற்றின் தடை குறைவாகவே இருக்கும். இதனால் மின்விசிறியின் மோட்டார் வேகமாகச் சுழன்று, அறை முழுவதும் அதிக காற்றைச் சீராக பரப்ப முடிகிறது.
மின்விசிறியில் கூடுதல் இறக்கைகள் இருக்கும்போது, ஒவ்வொரு கூடுதல் இறக்கையும் கூடுதல் தடையை உருவாக்கி மின்விசிறியின் சுழற்சி வேகத்தைக் குறைக்கிறது. இதனால், மோட்டாரின் ஆற்றலை அதிகரிக்காவிட்டால் காற்றின் வேகம் குறைகிறது. மோட்டாரின் மீது அதிக சுமையை ஏற்றாமலேயே வலுவான காற்றோட்டத்தை உருவாக்க மூன்று இறக்கைகள் உதவுகின்றன என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால்தான் இந்தியாவில், குறிப்பாக வெப்பமான காலநிலைகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மின்விசிறிகள் மூன்று இறக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.
குறைவான மின்சார நுகர்வு
குறைவான பிளேடுகளைக் கொண்ட ஒரு மின்விசிறியை இயக்குவதற்கு குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது. மூன்று பிளேடு மின்விசிறிகள் மிதமான வேகத்தில் கூட காற்றை விரைவாக நகர்த்துவதால், காலப்போக்கில் அவை குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன. நான்கு அல்லது ஐந்து பிளேடுகளைக் கொண்டு அதே காற்றோட்டத்தை அடைய, மோட்டார் கடினமாக உழைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது மின்சார நுகர்வை அதிகரித்து, மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும்.
அறிக்கைகளின்படி, மூன்று பிளேடுகள் கொண்ட மின்விசிறிகள் பெரும்பாலும் 'வாட்' ஒன்றுக்குச் சிறந்த காற்றோட்டச் செயல்திறனை வழங்குகின்றன. இதனால் இவை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவருக்குமே செலவுகளைக் குறைக்கிறது
உற்பத்தி செலவு குறைவு
மூன்று பிளேடுகள் உள்ள மின்விசிறியைத் தயாரிப்பது எளிமையானது மற்றும் செலவு குறைவானது. இதை உற்பத்தி செய்ய தேவைப்படும் மூலப்பொருட்களின் அளவு குறைவு, உற்பத்தி நேரம் குறைவு, மேலும் இதனால் மின்விசிறியின் மொத்த எடையும் குறைவாக இருக்கும். இது மின்விசிறியின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி, நுகர்வோருக்கு மூன்று இறக்கை கொண்ட விசிறிகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்கிறது.
நான்கு அல்லது ஐந்து இறக்கைகளைக் கொண்ட விசிறிகள் சந்தையில் இருந்தாலும், அதிக மூலப்பொருள் மற்றும் உற்பத்திச் செலவுகள் காரணமாக அவை பொதுவாக அதிக விலை கொண்டவையாக உள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, மூன்று இறக்கை மின்விசிறிகளே சிக்கனமான தேர்வாக அமைகிறது.
குறைவான சத்தம்
குறைவான பிளேடுகளைக் கொண்ட மின்விசிறிகள் குறைந்த சத்தத்தை ஏற்படுத்துவதோடு, மிகவும் அமைதியாகவும் இயங்குகின்றன. இது நிம்மதியான உறக்கத்திற்கு மிகவும் முக்கியமானது.



Click it and Unblock the Notifications

