Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி கும்மாயம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Aadi Velli Special Aadi Kummayam Recipe In Tamil: ஆடி மாதம் பிறக்கப் போகிறது. இம்மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்கள் மிகவும் சிறப்பான மற்றும் அம்மனை வழிபட உகந்த நாட்களாகும். இந்த கிழமைகளில் அம்மனுக்கு பூஜை செய்யும் போது பொங்கல், பாயாசம் போன்ற ஸ்வீட்களை செய்து படைத்து வழிபாடுகளை செய்வது வழக்கம். முக்கியமாக இம்மாதத்தில் ஆடி கும்மாயம் என்னும் ஒரு அற்புதமான ஸ்வீட்டை செய்வது வழக்கம். இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்கு இந்த ஆடி கும்மாயம் செய்து படைத்து வழிபடுங்கள். இந்த ஸ்வீட் மிகவும் அருமையான சுவையைக் கொண்டிருப்பதோடு, சத்தானதும் கூட.

உங்களுக்கு இந்த ஆடி கும்மாயம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆடி கும்மாயம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 3
கும்மாயம் செய்வதற்கு...
* பொடித்த வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* அரைத்த மாவு - 1 கப்
* நெய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் உளுத்தம்
பருப்பை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, அதையும் தட்டில் போட்டு குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மீண்டும் அந்த வாணலியில் அரிசியை சேர்த்து நன்கு பொரிய
விட்டு, 2 ஏலக்காய் சேர்த்து வறுத்து இறக்கி, தட்டில் போட்டு குளிர
வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மாவை சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின் சலித்த மாவில் இருந்து ஒரு கப் மாவை எடுத்து, ஒரு வாணலியில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும்,
அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு சலித்த மாவுடன் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி கட்டிகளின்றி
கரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த வாணலியை அடுப்பில் வைத்து, கைவிடாமல் தொடர்ந்து கிளறி
விட்டு வேக வைக்க வேண்டும். மாவானது கெட்டியாகத் தொடங்கியதும், 1/2
கப் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, அல்வா
பதத்திற்கு நன்கு திரண்டு வந்ததும், அதை இறக்கினால், சுவையான ஆடி
கும்மாயம் தயார்.



Click it and Unblock the Notifications