Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பிரட் பாயாசம்
உங்கள் வீட்டில் உள்ளோர் பாயாசத்தை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் சற்று வித்தியாசமான பாயாசத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு பிரட் பாயாசம் செய்யுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் இனிப்பாக ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பாயாசத்தை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் சற்று வித்தியாசமான பாயாசத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு பிரட் பாயாசம் செய்யுங்கள். இந்த பிரட் பாயாசம் மிகவும் சுவையாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பிரட் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் துண்டுகள் - 3
* பால் - 1 3/4 கப் + 1/4 கப்
* சர்க்கரை - 1/4 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிக்ஸ்டு நட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1 பெரிய சிட்டிகை
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, ஒவ்வொரு துண்டையும் நான்கு சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 3/4 கப் பாலை ஊற்றி 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பிரட் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் பாயாசம் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.
* இந்த கட்டத்தில் மீதமுள்ள 1/4 கப் பாலை ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து, நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பிரட் பாயாசம் தயார்.
குறிப்பு:
* இந்த பாயாசம் விரைவில் கெட்டியாகிவிடும் என்பதால் அருகில் இருந்து கவனித்து அடுப்பை அணைக்கவும்.
* பிரட் தூளை பாலில் சேர்த்ததும் அளவுக்கு அதிகமாக கொதிக்க விட வேண்டாம். இல்லாவிட்டால் சுவை பாழாகிவிடும்.
* ஒருவேளை பாயாசம் மிகவும் கெட்டியாக இருப்பது போல் தோன்றினால், பாலை சூடேற்றி ஊற்றி கிளறிவிடுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

