Latest Updates
-
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
எதிர்காலத்தை கணிப்பது என்பது எப்போதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒன்றாகும். தீர்க்கதரிசிகள் என்று வரும்போது அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பாபா வாங்காதான். பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள் இதுவரை உலகில் நடந்த பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் இப்போது அவரது கணிப்புகளைப் பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

உலகம் இப்போது அமெரிக்க-ஈரான் போர், ரஷ்யா-உக்ரைன் போர், பல நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் என பல பதற்றமான சூழல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உலகில் என்னென்ன மாற்றங்கள் மற்றும் அழிவுகள் நிகழ வாய்ப்புள்ளதாக பாபா வங்கா கணித்துள்ளதாக அவரை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். இந்த சம்பவங்கள் உலகின் தலைவிதியை மாற்றக்கூடியவை. இந்த பதிவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலகில் நடக்கப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளாலாம்.
2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்:
2026 ஆம் ஆண்டில் உலகம் ஒரு பெரும் போரை எதிர்கொள்ளப் போகிறது என்று பாபா வங்கா கணித்துள்ளார். 2026-ல் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய போர் நடைபெறும் என்று அவர் கணித்திருந்தார். இந்தக் கணிப்பு தற்போதைய உலகச் சூழலுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியதாக உள்ளது. உலகின் பல பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் போர்கள், வரும் காலங்களில் உலகளாவிய அளவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான ஒரு பெரும் போராக உருவெடுக்கக்கூடும்.
2027 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்:
2027 ஆம் ஆண்டில் உயிரியல் மாற்றங்கள் மற்றும் புதிய ஆபத்தான நோய்கள் தோன்றக்கூடும் என்று கணித்துள்ளார். 2027-ஆம் ஆண்டிற்குள் ஒரு புதிய நோயோ அல்லது பயலாஜிக்கள் பரிசோதனையோ உருவாகக்கூடும் என்றும், அதன் விளைவாகச் சில மனிதர்களிடம் 'சூப்பர் பவர்' போன்ற பண்புகள் அல்லது அறிகுறிகள் தென்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது புதிய போர் முறைகளைக் குறித்து பல நாடுகள் ஆராய்ந்து வருவதால் இந்தக் கணிப்பு நிஜமாக அதிக வாய்ப்புள்ளது. இதனை வேதியியல் மற்றும் உயிரியல் போர்முறைகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்க வாய்ப்புள்ளது.
2028 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்:
2026 ஆம் ஆண்டில் புதிய ஆற்றல் கண்டுபிடிப்பு மற்றும் வீனஸ் கிரகத்திற்கு பயணிப்பதற்கான தொடக்கம் போன்ற சம்பவங்கள் நிகழலாம். இந்த ஆண்டில் மனிதர்கள் சக்திவாய்ந்த மற்றும் தூய்மையான ஒரு புதிய ஆற்றல் மூலத்தைக் கண்டறிவார்கள் என்று பாபா வங்கா கணித்துள்ளார். மேலும், வீனஸ் கிரகத்திற்குப் பயணம் செய்வதற்கான அல்லது விண்வெளியில் குடியேற்றங்களை அமைப்பதற்கான திட்டங்கள் தொடங்கப்படும்.
2029 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்:
2029 ஆம் ஆண்டில் உலகளவில் பெரும் பொருளாதார மற்றும் சமூகப் புரட்சி நிகழலாம் என்று பாபா வங்கா கணித்துள்ளார். இந்த ஆண்டில், ஒட்டுமொத்த உலகின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு புரட்சி நிகழும். இதனால் உலகின் பழைய கட்டமைப்புகள் தகர்ந்து, புதிய தொடக்கத்துக்கு வழிவகுக்கும்.
2030 ஆண்டுக்கான கணிப்புகள்:
பூஜ்ஜிய கார்பன் நாகரிகத்தின் தொடக்கம்: பாபா வங்கா கணிப்புகளின்படி, 2030-ஆம் ஆண்டிற்குள் உலகம் "பசுமை ஆற்றலை" நோக்கி முழுமையாக நகரும். மேலும் காற்று மாசுபாட்டைக் குறைக்கத் தொழில்நுட்பம் பெருமளவில் மேம்படும். மேலும் மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ள இத்தகைய பொக்கிஷங்கள் அல்லது வளங்கள் கடலின் ஆழத்தில் கண்டறியப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாபா வாங்காவின் கணிப்புகள் பெரும்பாலும் மர்மமானவை மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டிருக்கக்கூடியவை; எனவே, அவற்றை விளக்குபவரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப அவை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஆகையால், இந்தக் கணிப்புகள் அல்லது தீர்க்கதரிசனங்கள் எதையும் துல்லியமாகக் கணிக்க இயலாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
