Latest Updates
-
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது..
Mercury Direct In Gemini On 24 July 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர்.

இந்த புதன் தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஜூலை இறுதியில், அதுவும் ஜூலை 24 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். புதனின் இந்த நிலை மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழிலில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். முக்கியமாக நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இப்போது புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை தேடி வரலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட வலுவடையும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைக்கு இக்காலத்தில் தீர்வு கிடைக்கும். இதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, மன நிம்மதி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


