Latest Updates
-
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க..
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
Rare Combination Of Hans And Gajakesari Yoga: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை 18 ஆம் தேதியான இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். ஏனெனில் இந்நாளில் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ஹன்ஸ் ராஜயோகமும், கஜகேசரி ராஜயோகமும் ஒரே நாளில் உருவாகியுள்ளன. இவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதில் குரு பகவானால் உருவாகியுள்ள பஞ்ச மகாபுருஷ யோகமானது ஒருவரது அறிவு, மரியாதை மற்றும் செல்வத்தை அளிக்கிறது. அதே சமயம் குரு மற்றும் சந்திரனால் உருவாகியுள்ள கஜகேசரி யோகமானது மகிழ்ச்சி, செழிப்பு போன்றவற்றை அளிக்கும். இவ்விரு சக்தி வாய்ந்த சுப யோகங்களும் இன்று உருவாவதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவை திறந்து எதிர்பாராத நன்மைகளைப் பெறக்கூடும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஹன்ஸ் மற்றும் கஜகேசரி ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படுவதோடு, சிலருக்கு புதிய பொறுப்புக்களும், சம்பள உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலும் நிதி நிலைமை வலுவடையும்.
ரிஷபம்
ஹன்ஸ் மற்றும் கஜகேசரி ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் வந்து குவியும். தொழிலதிபர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடனான உறவு வலுவடையும்.
கடகம்
ஹன்ஸ் மற்றும் கஜகேசரி ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்களுக்கு மன அமைதி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இன்று அதற்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
துலாம்
ஹன்ஸ் மற்றும் கஜகேசரி ராஜயோகங்களால் துலாம் ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிட்டும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
ஹன்ஸ் மற்றும் கஜகேசரி ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். குரு பகவானின் அருளால் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். சிலருக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


