Latest Updates
-
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம, ஒருவாட்டி இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்! -
Breast Cancer Awareness Month: இளம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? - விளக்கும் டாக்டர்! -
இந்தியாவில் 'தங்கத்தின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? நமக்கு பக்கத்துலதான் இருக்காம் -
குரு அதிசார பெயர்ச்சி 2026: குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் இவங்கதான்! ஜோதிடர் கணிப்பு! -
பச்சை பயறு வேர்க்கடலை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 14 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கபோகுதாம் -
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்!
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்!
Sun Jupiter Conjunction Make Mahalaxmi Rajyog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார்.

இந்த கடக ராசியில் ஏற்கனவே தேவர்களின் குருவான குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் கடக ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் மங்களகரமான ராஜயோகம் உருவாகியுள்ளது. அது தான் மகாலட்சுமி ராஜயோகம். இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதுவும் நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். இப்போது ஆடி மாதத்தில் குரு சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆடம்பரங்கள் அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். லட்சுமி தேவியின் அருளால் புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு-சூரிய சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் வாழ்வில் பல நல்ல நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால் அது நிறைவேறலாம. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



