ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்!

Jupiter Combust In Cancer On 15 July 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார்.

Jupiter Combust In Cancer On 15 July 2026 Will Bring Wealth And Prosperity To These Zodiac Signs

இந்நிலையில் ஜூலை 15 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். அதாவது சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளார். சூரியனுக்கு அருகில் கிரகங்கள் பயணிக்கும் போது, அந்த கிரகங்கள் வலுவிழந்து இருக்கும். ஆனால் கடக ராசி குரு பகவானின் உச்ச ராசி என்பதால், அதன் முழுமையான பலம் குறைந்துவிடாது. மாறாக அதனால் கிடைக்கும் நன்மைகள் சற்று தாமதம் ஏற்படும்.

அப்படி குரு பகவான் அஸ்தமனமாவதால் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான காலமாக இருக்கும். இப்போது குரு அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் மீண்டும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முடிவடையும். தொழில் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் காணக்கூடும். ஊடகம், கல்வி, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பேச்சில் தாக்கம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி ரீதியாக நல்ல உயர்வு ஏற்படும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய முடிவை எடுப்பார்கள். இது வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் கனவு இருந்தால், குருவின் அருளால் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆனால் கடின உழைப்பு பணியிடத்தில் பாராட்டப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்தமாக தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கும் இக்காலம் பொற்காலமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். குரு அருளால் எதிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, July 12, 2026, 15:03 [IST]
Desktop Bottom Promotion