Latest Updates
-
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம, ஒருவாட்டி இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்! -
Breast Cancer Awareness Month: இளம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? - விளக்கும் டாக்டர்! -
இந்தியாவில் 'தங்கத்தின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? நமக்கு பக்கத்துலதான் இருக்காம்
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
Cracked Heels Remedies In Tamil: அழகு பராமரிப்பு என்று வரும் போது பலரும் தங்கள் முகம், கைகளுக்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில், கால்கள் மற்றும் பாதங்களுக்கு கொடுக்க தவறுகின்றனர். இதன் விளைவாக பாதங்கள் அதிகமாக வறட்சிக்குள்ளாகி, குதிகால்களில் வறட்சி தீவிரமாகி வெடிப்புகளை ஏற்படுத்தி, பாதங்களின் அழகையே கெடுத்துவிடும். இந்த குதிகால் வெடிப்பை சரிசெய்ய முயற்சிக்காமல் விட்டால், அதன் பின் குதிகால் வெடிப்புகளானது ஆழமாகி மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

சரி, குதிகால் வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? உடல் பருமன், பொருந்தாத காலணிகளை அணிவது, நீண்ட நேரம் நிற்பது, அதிக சரும வறட்சி, போதுமான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பது போன்றவை தான் குதிகால் வெடிப்புக்கு முக்கியமான காரணங்களாகும். இந்த குதிகால் வெடிப்பை போக்க கடைகளில் ஏராளமான க்ரீம்கள் விற்கப்படுகின்றன.
இருப்பினும், நம் வீட்டு சமையலறையிலேயே குடிகால் வெடிப்பை போக்கும் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை தினமும் பயன்படுத்தி வந்தாலே குதிகால் வெடிப்பை போக்கலாம். இப்போது குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வழிகளைக் காண்போம்.
1. தேன்
* தேன் ஒரு சுவையூட்டி மட்டுமின்றி, மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பொருள் என்பதால் தான் இயற்கை மருத்துவத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இந்த தேன் குதிகால் வெடிப்பை போக்கவும் பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு ஒரு கப் தேனை 1 வாளை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பாதங்களை நன்கு கழுவிய பின், அதில் பாதங்களை வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் பாதங்களை வெளியே எடுத்து, உலர்த்த வேண்டும்.
* பிறகு பாதங்களில் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு படுக்கும் முன் செய்து வர, குதிகால் வெடிப்பு மறைவதைக் காணலாம்.
2. வேஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு
* இதற்கு இரவு தூங்கும் முன் முதலில் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் பாதங்களை உலர்த்தி கால வைக்க வேண்டும்.
* பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லினை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை பாதங்களில் தடவி, சாக்ஸ் அணித்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் காலையில் சாக்ஸை நீக்கிவிட்டு, பாதங்களை கழுவ வேண்டும்.
* இப்படி அடிக்கடி செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மாயமாய் மறைவதைக் காணலாம்.
3. வாழைப்பழம்
* இதற்கு நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பாதங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவ வேண்டும்.
* சிறந்த பலன்களைப் பெற, தூங்குவதற்கு முன் குறைந்தது 2 வாரங்களுக்கு இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
4. வெஜிடேபிள் ஆயில்
* இதற்கு பாதங்களை நன்கு கழுவி, உலர்த்திக் கொள்ள வேண்டும்.
* பின் வெஜிடேபிள் ஆயிலை பாதங்களில் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும்.
* இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வர, குதிகால் வெடிப்பு மறைவதைக் காணலாம்.
5. அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர்
* இதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து உலர்த்தி, தயாரித்து வைத்துள்ளதை பாதங்களில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* இதன் மூலம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
* பிறகு குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
