Latest Updates
-
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம்
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க..
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் என்பதால் சரும பிரச்சனைகளுக்கு பஞ்சமே இருக்காது. முக்கியமாக சருமத்தில் எண்ணெய் வழிவது, பொலிவிழந்த கருமையான சருமம், முகப்பரு, சரும வறட்சி, இறந்த செல்களின் தேக்கம், கரும்புள்ளிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி சருமத்தில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க நம் வீட்டு சமையலறையில் ஏராளமான பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் தேன்.

இந்த தேன் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால் ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பல்வேறு அழகு சாதன பொருட்களிலும் தேன் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு, இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் முகப்பருக்களைத் தடுக்கிறது.
இப்படிப்பட்ட தேனைக் கொண்டு பல்வேறு சரும பிரச்சனைகளை தடுக்கலாம். குறிப்பாக தேன் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற அற்புதமான பொருள். இப்போது சரும பிரச்சனைகளைத் தடுக்க இந்த தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
1. பொலிவான சருமத்திற்கு...
* கோடை வெயிலால் முகம் பொலிவிழந்து இருந்தால், ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும்.
2. முகப்பரு, பிம்பிளை தடுக்க...
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை பட்டை தூளை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகப்பரு அல்லது பிம்பிள் மீது தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி செய்யும் போது, முகப்பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்கள் குறைந்து, பருக்களும் தடுக்கப்படும்.
3. வறண்ட சருமத்திற்கு..
* சரும வறட்சியை அதிகம் சந்திப்பவர்கள் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இது சருமத் துளைகளை ஆழமாக நீரேற்றமடையச் செய்து, சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
4. இறந்த செல்களை நீக்க...
* சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் தேங்கும் போது, சருமம் கருமையாக காட்சியளிக்கும். இந்நிலையில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, 2-3 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி செய்வதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.
5. எண்ணெய் பசையை நீக்க..
* முகத்தில் எண்ணெய் அதிகம் வழிகிறதா? அப்படியானால் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
6. கரும்புள்ளிகளுக்கு..
* கரும்புள்ளிகள் அதிகமாக இருந்தால், ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி செய்யும் போது, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, சரும நிறம் சீராக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


