Latest Updates
-
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.!
Skin Care Tips In Tamil: ஒருவரது முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு கொடுக்க வேண்டிய பராமரிப்புக்களை தவறாமல் கொடுக்க வேண்டும். நமது சருமம் இயற்கையாகவே இறந்த செல்களை உதிர்க்கும். ஆனால் காற்று மாசுபாடு, வயது அதிகரிப்பது, மன அழுத்தம் போன்றவற்றால் இந்த செயல்முறை மெதுவாகிறது. இதன் விளைவாக சருமத்தில் இறந்த செல்கள் மேங்கி, சருமத்தை டல்லாகவும், மென்மையின்றியும், கருமையாகவும் காட்டும்.
இந்நிலையில் சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை அகற்ற எக்ஸ்போலியேஷன், அதாவது ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமத் துளைகளில் உள்ள அடைப்பு நீங்குவது மட்டுமின்றி, புதிய சரும செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும். அதோடு சருமத்தின் அமைப்பும் மேம்படும். அதுமட்டுமின்றி அடிக்கடி எக்ஸ்போலியேஷன் செய்யும் போது, கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை வருவது குறைவதோடு, சருமம் பொலிவோடு அழகாக இருக்கும்.

சருமத்தை எக்ஸ்போலியேட் செய்ய நம் வீட்டில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே செய்யலாம். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு எக்ஸ்போலியேஷன் செய்யும் போது, ஒட்டுமொத்த சருமமும் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.
1. சர்க்கரை மற்றும் தேன் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப் செய்ய ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி மென்மையாக 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. ஓட்ஸ் மற்றும் தயிர் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப் செய்வதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. காபி மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப் செய்வதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
4. தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப் செய்வதற்கு ஒரு பெளலில பாதி தக்காளியை எடுத்து, சர்க்கரையில் தொட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. கடலை மாவு மற்றும் பால் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப் செய்வதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு ஓரளவு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


