Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க..
Coffee Scrub To Remove Summer Tan: கோடை வெயில் சருமத்தின் நிறத்தை கருமையாக்கி, ஒருவரது அழகையே பாழாக்கிவிடும். உங்களின் சரும நிறமும் வெயிலால் மாறிவிட்டதா? இப்படி வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்க ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அதில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு சருமத்தில் அழற்சிகளை ஏற்படுத்தி, வேறு சில சரும பிரச்சனைகளையும் வரவழைத்துவிடும்.
எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சரும கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

பொதுவாக சருமத்தின் நிறம் மாறுகிறது என்றால், சருமத்தில் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அதிகம் தேங்கியிருக்கலாம். இந்நிலையில் சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க வேண்டுமானால், அதற்கு ஸ்க்ரப்களை பயன்படுத்த வேண்டும்.
அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள காபித் தூள் கொண்டு ஒரு ஸ்க்ரப்பை தயாரித்து பயன்படுத்தி வந்தால், பொலிழந்து காணப்படும் சருமத்தை பொலிவாக்கலாம் மற்றும் சரும நிறத்தையும் அதிகரிக்கலாம். இப்போது வெயிலால் கருமையான சரும நிறத்தை வெள்ளையாக்க காபித் தூள் கொண்டு எப்படி ஸ்கரப் தயாரித்து பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* காபித் தூள் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* காய்ச்சாத பால் அல்லது ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் காபித் தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சாத பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதுவும் ஸ்க்ரப் செய்யும் போது பொலிவிழந்த பகுதியை மென்மையாக 4-5 நிமிடங்கள் சுழற்சி முறையில் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின் அதை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் துடைக்க வேண்டும்.
* இறுதியாக மறக்காமல் மாய்ஸ்சுரைசர் அல்லது சீரம்மை சருமத்தில் தடவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள காபித் தூள் ஸ்க்ரப்பை வாரத்திற்கு 2 முறை இரவு தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். முக்கியமாக சருமத்தின் நிறத்திலும் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications