Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டி பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Beetroot Dosa With Mint Chutney Recipe in Tamil: உங்கள் பிள்ளைகள் பீட்ரூட் சாப்பிடமாட்டார்களா? அவர்களை பீட்ரூட் சாப்பிட வைக்க வேண்டுமா? அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு தோசை ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த தோசை வழியாக பீட்ரூட் சாப்பிட வையுங்கள். அதாவது பீட்ரூட் கொண்டு தோசை தயாரித்து கொடுங்கள்.

இந்த பீட்ரூட் தோசை கண்களைப் பறிக்கும் வகையில் அருமையான நிறத்தில் இருப்பதோடு, சுவையும் பிரமாதமாக இருக்கும். இந்த தோசைக்கு புதினா தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். இந்த டிபன் காம்போவை வீட்டில் பீட்ரூட்டும், புதினாவும் இருக்கும் போது ட்ரை செய்து பாருங்கள்.
உங்களுக்கு இந்த பீட்ரூட் தோசை மற்றும் புதினா தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் தோசை மற்றும் புதினா தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் தோசைக்கு..
* பீட்ரூட் - 1
* இஞ்சி - 1 துண்டு
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* தோசை மாவு
* நெய் - தேவையான அளவு
புதினா தேங்காய் சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 5 பல்
* புளி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* புதினா - 1 கையளவு
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம்,
உப்பு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் தோசை மாவை எடுத்துக் கொண்டு, அதில் அரைத்த
பீட்ரூட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவைக் கொண்டு தோசை சுட்டு, நெய் ஊற்றி, முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் தோசை தயார்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு, புளி, பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கையளவு புதினாவை சேர்த்து ஒருமுறை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொட்டுக்கடலை மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அதோடு
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு, வரமிளகாய்,
கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான புதினா தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
