Latest Updates
-
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? -
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்..
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
Sun Transit In Leo 2026 After 1 year: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திலும் சூரியன் ராசியை மாற்றவுள்ளார். ஆனால் இந்த ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி மிக முக்கியமான பெயர்ச்சியாகும். ஏனெனில் இம்மாதம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதலாக சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணிக்கவுள்ளார்.

ஜோதிடத்தில் சூரியன் தன்னம்பிக்கை, மரியாதை மற்றும் தலைமைத்துவத்தின் காரணியாகக் கருதப்படுகிறது. சொந்த ராசிக்கு சூரியன் செல்வதால், சூரியனின் செல்வாக்கு இன்னும் அதிகமாக இருக்கும். இதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்கள் நிதி ஆதாயம், தொழில் முன்னேற்றம், மரியாதை மற்றும் புதிய வெற்றிகள் போன்றவற்றை பெறவுள்ளனர். இப்போது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல வெற்றிகளும், லாபமும் குவியும். இடமாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இந்த சூரிய பெயர்ச்சியால் நல்ல இடமாற்றம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசைகள் நிறைவேறலாம். தொழில் ரீதியான பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நபரின் வருகையால் வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் தமக்கென ஒரு அடையாளத்தை வெற்றிகரமாக நிலைநாட்டுவார்கள். இக்காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். பயணங்களை மேற்கொள்ளலாம். வீட்டு வசதிகளும் சௌகரியங்களும் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படக்கூடும். உங்கள் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மறக்கமுடியாத தருணங்களை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


