மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க..

Monsoon Skin Care Tips In Tamil: மழைக்காலமானது வெயிலில் இருந்து நல்ல நிவாரணத்தை அளித்தாலும், ஈரப்பதமான காலநிலையானது சருமத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அதுவும் வியர்வை, அதிகப்படியான எண்ணெய் சுரப்பு, ஈரப்பதம் காரணமாக முகப்பரு, சரும எரிச்சல் மற்றும் பொலிவிழந்த சருமம் போன்ற பிரச்சனைகளால் சிலர் அவதிப்படக்கூடும். முக்கியமாக எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள் மழைக்காலத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Top 5 DIY Natural Face Packs To Keep Your Skin Healthy During Monsoon

அதற்காக விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. மாறாக, நம் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தினாலே, சருமத்தை பொலிவோடும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். இப்போது மழைக்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

1. ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.
* பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஃப்ரிட்ஜ்ஜில் சிறிது நேரம் வைத்து, அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 ஸ்பூன் கடலை மாவு எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

3. தேன், லாவெண்டர் எண்ணெய் மற்றும் டீ-ட்ரீ ஆயில் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேன், 4 ஸ்பூன் லாவெண்டர் ஆயில் மற்றும் ஒரு துளி டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து 5 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. சந்தனம் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பெளலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பாதி எலுமிச்சையின் சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, October 23, 2026, 21:45 [IST]
Desktop Bottom Promotion