Latest Updates
-
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்.. -
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா? -
பாம்பு இரத்தத்தை குடிக்கும் பழக்கமுள்ள நாடுகள் - இந்த வினோத பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்! -
ஹரா பரா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா? -
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க
Skin Care Tips: கண்ணாடி போன்ற பளபளக்கும் சருமம் வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால் அப்படிப்பட்ட சருமத்தை அடைவது ஒரே நாளில் நிகழ்ந்து விடக் கூடியதல்ல. நம்முடைய வாழ்க்கை முறை, ஆரோக்கிய பழக்கங்கள் குறிப்பாக உணவுமுறை போன்றவை சருமப் பராமரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

நாம் உட்கொள்ளும் உணவு நம் சருமத்தின் தோற்றத்திலும், பொலிவிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. சருமத்திற்கு அமைப்பையும், உறுதியையும் அளிக்கும் 'கொலாஜன்' எனும் புரதம், வயது ஏற ஏற இயற்கையாகவே குறையத் தொடங்குகிறது. இந்த புரதத்தை உருவாக்க உடலுக்குச் சில குறிப்பிட்ட சத்துக்கள் அவசியம். இந்த ஊட்டச்சசத்துக்களைப் பெறுவதற்குப் சில பழங்களை சாப்பிட வேண்டும். எந்தவொரு பழமும் ஒரே நாளில் உங்கள் சருமத்தை ஜொலிக்க வைத்துவிடாது. ஆனால், வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பல்வேறு பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது, ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கான ஒரு நல்ல தொடக்கமாக அமையும். இந்த பதிவில் எந்தெந்த பழங்கள் கண்ணாடி போன்ற சருமத்தை அளிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் நாம் நினைப்பதை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததாகும். இதில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது, இந்த ஊட்டச்சத்து கொலாஜனை உருவாக்கப் பயன்படுகிறது. மேலும், இதில் போதுமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. எனவே உங்கள் உணவில் அடிக்கடி கொய்யாப்பழத்தை சேர்த்துக் கொள்வது நல்லது. கொய்யாவை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட்களிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
கிவி
கிவி பழம் காலை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய சிறந்த பழமாகும். கிவி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது, இது உங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், செல்களை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து (oxidative stress) பாதுகாக்க உதவுகின்றன. இந்த பழத்தை பல வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பழமாகும். கொலாஜன் உற்பத்திக்கு அதிகளவில் வைட்டமின் சி தேவைப்படுகிறது, எனவே நீங்கள் உட்கொள்ளும் உணவுகளின் மூலம் போதுமான அளவு வைட்டமின் சி பெறுவது முக்கியம். ஆரஞ்சுப் பழங்கள் எளிதில் கிடைக்கக் கூடியவை மற்றும் புத்துணர்ச்சி அளிப்பவை. அவற்றை முழு பழமாக அல்லது பழச்சாறாக பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்ட்ராபெர்ரி
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சரும ஆரோக்கியத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதை வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேர்மங்களின் சிறந்த மூலமாக உள்ளது. ஸ்ட்ராபெர்ரியை எந்த உணவிலும் எளிதாகச் சேர்த்துக்கொள்ளலாம். தயிரில் கலந்து உண்ணலாம், ஸ்மூத்தியாக அரைத்து அருந்தலாம், ஓட்ஸ் உடன் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம். ஸ்ட்ராபெர்ரியை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
பப்பாளி
ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்பினால், பப்பாளி பழத்தை உங்கள் உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியிலும், அதைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்குகின்றன. பிற பழங்களைப் போலவே பப்பாளியையும் பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications

