அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள்

Athisara Guru Peyarchi Palan 2026: நவகிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை பலப்படுத்துவார் என்பதால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்கிறோம். கடக ராசியில் பயணம் செய்த குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி முதல் சிம்ம ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்கப்படி, வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்.

Guru Peyarchi Palan 2026 Aries Taurus Gemini Predictions By Astrologer Jeyalakshmi

குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து 5 ஆம் பார்வையாக தனுசு ராசியையும், 7 ஆம் பார்வையாக கும்ப ராசியையும், 9 ஆம் பார்வையாக மேஷ ராசியையும் பார்வையிடுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு குரு பலன் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் பயணம் மற்றும் பார்வையால் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு அதிசார குரு பெயர்ச்சி அற்புதான யோகத்தை தரப்போகிறது. ஏழரை சனியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். குரு பகவான் ஐந்தாம் இடமான புத்திர பாக்கியம், தெய்வ அருள், புண்ணியங்கள், காதல் என்ற ஸ்தானத்தின் இடத்திற்கு வருவது அதிர்ஷ்டம். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படப்போகிறது.

உங்களுடைய ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால், புகழ், கீர்த்தி, அந்தஸ்து பெறலாம். வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும்.

குருவின் பார்வை உங்க ராசிக்கு 9 ஆம் இடத்தின் மீது விழுவதால், கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். கடைசி நேரத்தில் நின்று போன திருமணம், திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

குருவின் பார்வை லாப ஸ்தானத்தின் மீது விழுவதால், பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். சூரியனின் வீட்டில் குரு பயணம் செய்யப்போவதால், மேதா தட்சிணா மூர்த்தியை நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் சுக ஸ்தானமான 4 ஆம் வீட்டில் பயணம் செய்வதோடு உங்க ராசிக்கு 8, 10, 12, ஆகிய வீடுகளை பார்வையிடுகிறார். குருவினால் 4 ஆம் பாவம் மட்டுமே ஸ்தான பலம் இழக்கும். அதாவது வண்டி வாகன விரைய செலவுகள் வரும். சிலருக்கு சொந்த வீட்டின் புதுப்பிக்கும் செலவுகள் வரும். வேலை மாற்றம் காரணமாக வாடகை வீட்டிற்க்கு செல்வீர்கள். இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் என மாறிமாறி அனுபவிப்பீர்கள்.

8 ஆம் வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பண மோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வந்து மன்னிப்பு கேட்பார்கள். உங்களின் ஆயுளுக்கு ஏற்பட்ட கண்டம் நீங்கப் போகிறது. நினைத்தது எல்லாம் நிறைவேறும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

இதுவரை நலிவுற்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். முடங்கிய பணம் எல்லாம் கைக்கு வரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். 12 ஆம் வீட்டினை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்தவர்களுக்கு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே! குரு பகவான் உங்க ராசிக்கு முன்றாம் பாவமான தைரியம், சகோதரம், வீரம், எழுத்தறிவு, விளையாட்டு துறை என்று சொல்லப்படும் வீட்டிற்கு வருவது யோகம்தான். குரு மறையப் போகிறார் என கவலை வேண்டாம். குருவின் பார்வை படும் 7, 9, 11, ஆம் வீடுகளின் மீது விழுவதால் யோகத்தை அனுபவிக்க போகிறீர்கள்.

திருமணம் தாமதமாகி நின்றவர்களின் வீட்டில் கெட்டிமேளம் சத்தம் கேட்கும். குரு பலனால் திருமணம் சுப காரியம் நடக்கும். திருமணம் ஆகி விவாகரத்திற்காக கோர்ட்டு படி ஏறிய தம்பதியர் மீண்டும் ஓன்று சேருவார்கள். பாக்கிய ஸ்தானத்தை குரு பார்க்கப் போவதால் நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள், பூர்விக சொத்து பரிமாற்றம், புது முயற்சிகள் கைகூடும்.

லாப ஸ்தானத்தை குரு பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்றத்தை தரும். நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புதன்கிழமை குரு பகவானை தரிசிப்பது நன்மையை தரும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 23, 2026, 23:45 [IST]
Desktop Bottom Promotion