டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Delhi Style Chana Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் பூரி, சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சன்னா மசாலா பிடிக்குமா? அப்படியானால் அடுத்தமுறை சன்னா மசாலாவை செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், டெல்லி ஸ்டைல் சன்னா மசாலாவை செய்யுங்கள். இந்த சுவையில் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

Delhi Style Chana Masala How To Make Chole Masala Recipe

உங்களுக்கு டெல்லி ஸ்டைல் சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* கொண்டைக்கடலை - 1 கப் (8 மணிநேரம் ஊற வைத்தது)
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்

பிற பொருட்கள்..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 5
* கருப்பு ஏலக்காய் - 2
* பச்சை ஏலக்காய் - 3
* பட்டை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சன்னா மசாலா தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* பாலக் கீரை - 1/4 கப் (அரைத்தது)
* புளிச்சாறு - 1/4 கப்
* வெல்லம் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிது (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் குக்கரில் 8 மணிநேரம் ஊற வைத்த கொண்டைக்கடலையை எடுத்துக் கொண்டு, அத்துடன் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அவை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, மிளகு, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பட்டை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சன்னா மசாலா தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் அரைத்த பாலக்கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளிச்சாறு மற்றும் வெல்லத்தை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த கொண்டைக்கடலையை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலையை லேசாக மசித்து விட வேண்டும்.
* அதன் பின் மூடி வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி விட வேண்டும்.
* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், சீரகம், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய இஞ்சி மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறி, சன்னா மசாலாவுடன் சேர்த்து கிளறினால், டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 23, 2026, 22:55 [IST]
Desktop Bottom Promotion