Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றதுக்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்.. -
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா? -
பாம்பு இரத்தத்தை குடிக்கும் பழக்கமுள்ள நாடுகள் - இந்த வினோத பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்! -
ஹரா பரா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா? -
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு மட்டும் வாஸ்துப்படி இருந்தால் போதாது. அந்த வீட்டில் உள்ள பொருட்களும் வாஸ்து விதிகளின் படி சரியான இடத்தில், சரியான திசையில் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் நிரம்பியிருக்கும் மற்றும் அந்த வீட்டில் உள்ளோரும் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு, வீடும் செல்வ செழிப்போடும் இருக்கும்.

மேலும் வாஸ்து கொள்கைகளின் படி, வீட்டில் உள்ள சில பொருட்களை எப்போதும் காலியாக விடக்கூடாது. ஏனெனில் அவை எதிர்மறையை வரவழைத்து, வீட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் அதுவே உண்மை. வாஸ்துவில் ஒவ்வொரு பொருளும் இடமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலைக் கொண்டுள்ளன.
அவற்றை சரியாக வைக்காவிட்டால் அல்லது காலியாக விட்டால், அவை நிதி நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, வாழ்வில் பல தடைகளை சந்திக்க வைக்கும். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் எந்தெந்த பொருட்களை காலியாக விடக்கூடாது என்பதைக் காண்போம்.
1. வாளி
நம் வீட்டில் நீரை சேமித்து வைக்கும் வாளி, குடம் போன்றவற்றை எப்போதும் காலியாக வைத்திருக்கக்கூடாது. குறிப்பாக குளியலறை செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமான தண்ணீர் வெளியேறும் இடமாக கருதப்படுகிறது. எனவே இங்கு உள்ள வாளியில் எப்போதும் நீர் முழுமையாக நிரம்பியிருக்காவிட்டாலும், கொஞ்சமாவது நீர் இருக்க வேண்டும். வாளி காலியாக இருந்தால், அது நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை சீர்குலைத்துவிடும். எனவே ஒருபோதும் வாளியில் நீரை நிரப்பி வைத்திருங்கள்.
2. சமையலறை டப்பாக்கள்
சமையலறையில் பொருட்களை டப்பாக்களில் போட்டு சேமித்து வைத்திருப்போம். வாஸ்துப்படி, இந்த டப்பாக்களை ஒருபோதும் காலியாக விடக்கூடாது. ஏனெனில் இவை வீட்டிற்குள் ஏராளமான நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். இந்நிலையில் காலியாக வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரித்துவிடும். சமையலறையில் உள்ள டப்பாக்களை எப்போதும் நிரப்பி வைத்திருப்பதன் மூலம், அது வீட்டை செழிப்பாக வைத்திருப்பதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றலை நிரம்பியிருக்கச் செய்யும்.
3. அரிசி மற்றும் தானியங்கள்
வீட்டில் அரிசி மற்றும் தானியங்களை போட்டு வைக்கும் கொள்கலன்களை ஒருபோதும் காலியாக விடக்கூடாது. வாஸ்துப்படி, வெற்று கொள்கலன் குடும்பத்தின் கௌரவத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது அன்னப்பூரணி தேவியை அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே குடும்பத்தில் செழிப்பையும் மிகுதியையும் வரவேற்க எப்போதும் அரிசி கொள்கலனில் அரிசியை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
4. பணம் வைக்கும் இடம்
பணம் வைக்கும் பர்ஸ் அல்லது பணப்பைகளில் எப்போதும் சிறிது பணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பணம் செல்வம் மற்றும் வெற்றியைக் குறிக்கக்கூடியது. எனவே பணம் வைக்கும் பையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் காலியாக வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும்.
5. பூ ஜாடிகள்
வாஸ்துப்படி, வீட்டில் பூ ஜாடிகள் இருந்தால், அவற்றில் தினமும் பூக்களை தவறாமல் மாற்ற வேண்டும். வாடிய பூக்களோ அல்லது ஜாடி பூக்களின்றி இருக்கவோ கூடாது. வெற்று பூ ஜாடிகள் நிறைவேறாத உறவுகள் அல்லது வீட்டிற்குள் வெறுமையின் உணர்வைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே வீட்டில் அன்பு, நல்லிணக்கம், நேர்மறை ஆற்றல் எப்போதும் நிரம்பியிருக்க பூ ஜாடிகளில் தினமும் அழகான பூக்களை வாங்கி நிரப்புங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
