Latest Updates
-
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்.. -
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா? -
பாம்பு இரத்தத்தை குடிக்கும் பழக்கமுள்ள நாடுகள் - இந்த வினோத பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்! -
ஹரா பரா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும்
Urulai Kizhangu Podi Varuval Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்குதான். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் உருளைக்கிழங்கு பிரியர்களா? அதனால் அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? ஆனால் சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான ரெசிபி தான் இது.

இந்த கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும். இந்த உருளைக்கிழங்கு பொடி வறுவல் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இதை செய்தால் குழந்தைகள் இதை வெறுமனே கிண்ணத்தில் போட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும், மேலும் இந்த உருளைக்கிழங்கு பொடி கறியை செய்வதும் மிகவும் எளிதானதாகும்.
உங்களுக்கு கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ உருளைக்கிழங்கு
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் உப்பு
- 1 ஸ்பூன் கொத்தமல்லி இலை
பொடி அரைக்கத் தேவையானவை:
- 1 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 6 வர மிளகாய்
- ¼ ஸ்பூன் வெந்தயம்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்குகளை நன்கு கழுவிக்கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்குகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் நறுக்கிய உருளைக்கிழங்குகளைச் சேர்க்கவும்.
- அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ½ டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
- உருளைக்கிழங்கு முக்கால் பதம் வேகும் வரை சமைக்கவும், அவ்வப்போது
கிளறி விடவும்.
உருளைக்கிழங்கை முழுமையாக வேக வைக்க வேண்டாம், ஏனெனில் மசாலாப்
பொருட்களுடன் சேர்க்கும்போது அவை குழைந்துவிடக்கூடும்.
- உருளைக்கிழங்குகள் வெந்ததும், தண்ணீரை வடித்துவிட்டு, வேகவைத்த உருளைக்கிழங்குகளைத் தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் மல்லி விதைகள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து வறுக்கவும்.
- பருப்பு வகைகள் லேசான பொன்னிறமாக மாறியதும், அடுப்பை அணைத்துவிடவும். வறுத்த பொருட்களை ஆறவிடவும். ஆறிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.
- கொரகொரப்பான பொடியாக அரைத்து அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கும்போது, கறிவேப்பிலையைச் சேர்த்து கிளறவும்.
- வேகவைத்த உருளைக்கிழங்குகளை வாணலியில் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும்.
- பின்னர் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருளைக்கிழங்கை மேலும் 10 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வளவுதான் மொறுமொறுப்பான, சுவையான உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications
