Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா?
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
Spicy Paneer Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? அந்த பன்னீரை எப்போதும் ஒரே சுவையில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா? சற்று காரசாரமாக, அதே சமயம் சப்பாத்திக்கு ஏற்றவாறு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் ஸ்பைசி பன்னீர் கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த பன்னீர் கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொடிப்பதற்கு...
* சீரகம் - 1/2
* சோம்பு - 1/2
* மிளகு - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 2
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தண்ணீர் - சிறிது
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த மிளகு சீரக பவுடர்
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை
சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு,
வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி,
மூடி வைத்து 10-12 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி
கலந்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி வேக
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மிளகு சீரக பவுடரை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மற்றும்
காரசாரமான பன்னீர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications