Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் என்பதால் அதிக வெயில் காரணமாக வியர்வை அதிகம் வெளியேறும். இப்படி அதிகம் வியர்ப்பதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகமாக இருந்தால், முகப்பரு பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். இந்நிலையில் கோடைக்காலத்தில் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் சுரப்பை குறைக்கவும், சருமத்தை பொலிவோடு பிரகாசமாக வைத்துக் கொள்ளவும், ஃபேஸ் பேக்குகளை போடுவது தான் சிறந்த வழி.

அதுவும் எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களுக்கு சிறந்தது என்றால் அது முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான். முல்தானி மெட்டி என்பது கனிமச்சத்து அதிகம் நிறைந்த ஒருவகையான களி மண். இது சருமத்தில் மாயங்களைப் புரியக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. இந்த முல்தானி மெட்டியைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சுரப்பு குறைவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறிவிடும்.
அதுமட்டுமின்றி, முகப்பரு தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவையும் வெளியேறும். முக்கியமாக இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் முதுமைத் தோற்றத்தைத் தரும் முதுமைக்கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவும். இப்படிப்பட்ட முல்தானி மெட்டியைக் கொண்டு கோடைக்காலத்தில் எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்பதை இப்போது காண்போம்.
1. முல்தானி மெட்டி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* பிறகு முகத்தை துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
2. முல்தானி மெட்டி மற்றும் சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பின் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். மேலும் இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
3. முல்தானி மெட்டி மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* பின்னர் முகத்தை துடைத்து, மைல்டு மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
4. முல்தானி மெட்டி மற்றும் முட்டை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்த வேண்டும்.
5. முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம், பிம்பிள் நீங்குவதோடு, முகப்பரு தழும்புகளும் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


