Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Summer Skin Care Tips: கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக சூரியனின் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தால் சருமத்தின் நிறம் கருப்பமாக மாறும். இப்படியான சூழ்நிலையில் வெயிலால் சருமம் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.
அதுவும் மாய்ஸ்சுரைசர், சன் ஸ்க்ரீன் போன்றவற்றை தவறாமல் பயன்படுத்துவதோடு, முகத்திற்கு அடிக்கடி ஃபேஸ் பேக்குகளையும் போட வேண்டும். குறிப்பாக பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வரும் போது, சருமத்தில் ஏற்படும் கருமை தடுக்கப்படுவதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் மேம்படும். அப்படி அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி.

இந்த பப்பாளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்களால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கீழே கோடைக்காலத்தில் சருமம் கருமையாவதைத் தடுக்க உதவும் சில பப்பாளி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பப்பாளி, திராட்சை, தேன் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் திராட்சை ஜூஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* சிறந்த பலனைப் பெற, இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு குறைந்தது 3 முறை பயன்படுத்தலாம்.
2. பப்பாளி, தேன், எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 1/2 கப் நன்கு கனிந்த பப்பாளி துண்டுகளை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தலாம்.
3. பப்பாளி மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளி துண்டுகளை சிறிது எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கடலை மாவை சேர்த்து, சிறிது தயிரையும் சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை ஃப்ரிட்ஜ்ஜில் 15 நிமிடம் வைத்து எடுத்து, பின் முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, சரும துளைகளை மூட ஐஸ் கட்டிகளால் முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
4. பப்பாளி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
* இன்னும் சிறப்பான பலனைப் பெற, இந்த ஃபேஸ் பேக்குடன் முல்தானி மெட்டியை சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.
5. பப்பாளி மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளி துண்டுகளை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


