Latest Updates
-
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம்
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: தற்போது வெயில் மிகவும் கடுமையாக உள்ளது. கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பலரது சருமம் அதிகப்படியான வெயில் காரணமாக கருமையாகக்கூடும். அதுவும் போதுமான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருந்தால், ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறிவிடுவோம்.
எனவே எப்படி மற்ற காலங்களில் சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் கோடைக்காலத்திலும் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக வெளியே வெயிலில் செல்வதற்கு முன் தவறாமல் சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சூரிய கதிர்களால் சருமம் சேதமடைவது தடுக்கப்படும். இது தவிர கோடைக்காலத்தில் சருமம் நிறம் மாறாமல் இருக்க ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும்.
அதுவும் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடும் போது, சரும செல்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும், சருமமும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இப்போது வெயிலால் முகம் கருமையாகாமல் இருக்க போட வேண்டிய சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 5 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் நீரைப் பயன்படுத்தி, மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் வெயிலால் சருமம் கருமையடைவதைத் தடுக்கும்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பாதி உருளைக்கிழங்கைத் துருவி, அதன் சாற்றினை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், வெயிலால் முகம் கருமையாவதைத் தடுக்கலாம்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி, சிறிது நேரம் சருமத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த சிறிது பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

