Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க முகம் வறண்டு சொரசொரன்னு இருக்கா? அப்ப இந்த தயிர் ஃபேஸ் பேக்குகளை போடுங்க...
Skin Care Tips In Tamil: என்ன தான் பனிக்காலம் முடிந்தாலும், இன்னும் பனிப்பொழிவு இருக்கத் தான் செய்கிறது. இப்படி அதிக பனிப்பொழிவானது சருமத்தில் அதிக வறட்சியை உண்டாக்கி, சருமத்தின் அமைப்பையே பாதிக்கும். இந்நிலையில் சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்க, சருமத்திற்கு நீரேற்றமளிக்கும் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவோம்.
ஆனால் எவ்வளவு மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தியும் உங்களின் சருமம் வறண்டு போகிறதா? அப்படியானால் உங்கள் சருமத்திற்கு கூடுதல் பராமரிப்பை கொடுக்க வேண்டும். அதற்கு சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் மற்றும் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

உங்களின் முகச்சருமமும் பனியால் அதிகம் வறண்டு சொரசொரவென்று உள்ளதா? அப்படியானால் தயிரைக் கொண்டு ஒருசில ஃபேஸ் பேக்குளை போடுங்கள். இப்படி தயிர் ஃபேஸ் பேக்குகளை போடும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பதத்துடன் இருக்கும். கீழே சரும வறட்சியைத் தடுக்கும் சில தயிர் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்த வேண்டும்.
2. தயிர் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை நன்கு கழுவி, முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும வறட்சியைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள கருமையையும் போக்கும்.
3. தயிர் மற்றும் வாழைப்பழம்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பாதி வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதோடு, சருமத்தை இளமையாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
4. தயிர் மற்றும் ஓட்ஸ்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி ஊற வைத்து, 2-3 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.
5. தயிர் மற்றும் ஆலிவ் ஆயில்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் மிகவும் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு ஏற்றது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
