Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
பனியால் முகத்தில் வறட்சி அதிகமா ஏற்படுதா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
Winter Face Packs In Tamil: தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. வீட்டிற்குள் இருந்தாலும், அதன் தாக்கம் சருமத்தில் அதிகமாக தெரிகிறது. பொதுவாக இப்படியான பனிப்பொழிவின் போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. மிகவும் குளிர்ச்சியான மற்றும் வறண்ட காற்றினால், சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கி, சருமம் அதிகமாக வறண்டு போவதோடு, சருமத்தில் வெடிப்புகளும் ஏற்படுகிறது.
இந்நிலையில் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசர்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இது தவிர முகத்தில் ஏற்படும் வறட்சியை போக்க ஃபேஸ் பேக்குகளை போடலாம். இப்படி ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், முகச் சருமம் ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்துடனும் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும். இப்போது பனியால் முகத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம். இவற்றில் உங்களுக்கு ஏற்றதை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை ஒரு பௌலில் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பாதாமை பாலில் போட்டு இரவு தூங்கும் போது ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு தயிருடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முட்டையின் மஞ்சள் கருவை ஒரு பௌலில் எடுத்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது கிளிசரினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை பஞ்சுருண்டை பயன்படுத்தி முகத்தில் தடவி, 10 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சிறிது எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications