Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பனியால் உங்கள் முகம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப கற்றாழை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க...
Skin Care Tips In Tamil: குளிர்காலம் என்பதால் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இப்படி பனி அதிகம் பொழிவதால் சருமத்தில் உள்ள ஈரப்பசை வேகமாக நீங்கி, சரும வறட்சியை அதிகம் சந்திக்க நேரிடுகிறது. பனிக்காலத்தில் நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் சரும வறட்சி.
இந்த சரும வறட்சியைப் போக்க தினமும் தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் முகத்திற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளையும் போட வேண்டும். இப்படி ஃபேஸ் பேக்குகளைப் போடுவதால், சரும வறட்சி தடுக்கப்படுவது மட்டுமின்றி, சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

குளிர்காலத்தில் சந்திக்கும் சரும வறட்சியைப் போக்க கற்றாழை பெரிதும் உதவி புரிகிறது. அதுவும் கற்றாழையைக் கொண்டு அடிக்கடி ஃபேஸ் பேக் போடும் போது சருமம் நீரேற்றத்துடனும், மென்மையாகவும், பளபளவென்றும் இருக்கும். நீங்கள் சரும வறட்சியால் அதிகம் சிரமப்பட்டு வருகிறீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில கற்றாழை ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்கள்.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தை ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது பாலில் ஊற வைத்து 4-5 குங்குமப்பூ இதழ்கள் மற்றும் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும எரிச்சலை போக்கி, சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications