Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Drumstick Leaves Benefits In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் கீரைகளில் ஏராளமான அளவில் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரைகளில் விலைக்குறைவில் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு கீரை தான் முருங்கைக்கீரை. இந்த கீரை பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக மதிக்கப்படுகிறது.

ஏனெனில் இதன் இலைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதுவும் இந்த கீரையின் இலைகளை தினமும் சிறிது மென்று விழுங்குவதன் மூலம் உடலில் சந்திக்கும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது தினமும் சிறிது முருங்கை இலையை மென்று சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
முருங்கை இலையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே இந்த முருங்கை இலையை தினமும் காலையில் சிறிது மென்று விழுங்குவதன் மூலம், உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடவும், நோய்வாய்ப்பட்டதில் இருந்து விரைவில் மீளவும் உதவுகிறது.
2. செரிமானம் மேம்படும்
முருங்கை இலையை தினமும் சிறிது மென்று சாப்பிடுவதன் மூலம் செரிமான நொதிகள் தூண்டப்படும் மற்றும் செரிமான செயல்பாடும் மென்மையாக இருக்கும். அதோடு இந்த கீரையில் மிதமான அளவில் மலமிளக்கும் பண்புகள் இருப்பதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
3. இதய ஆரோக்கியம் மேம்படும்
முருங்கை இலையில் பொட்டாசியம், ஃப்ளேவோனாய்டுகள் அதிகமாக உள்ளன. இவை இரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு, இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. அதுவும் இந்த இலையை தினமும் சிறிது மென்று சாப்பிட்டு வந்தால், இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம். எனவே இதயம் தொடர்பான பிரச்சனை வரக்கூடாதெனில் முருங்கை இலையை சாப்பிடுங்கள்.
4. உடல் சோர்வு நீங்கும்
முருங்கை இலையில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்க அதிகமாக உள்ளன. இவை உடலின் ஆற்றல் அளவை மேம்படுத்த இன்றியமையாதவையாகும். ஆகவே நீங்கள் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், உடலின் ஆற்றலையும், வலிமையையும் மேம்படுத்த நினைத்தால், முருங்கை இலையை தினமும் சிறிது மென்று சாப்பிடுங்கள்.
5. சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும்
முருங்கை இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள்ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும பொலிவை மேம்படுத்தவும், வலிமையான தலைமுடியைப் பெறவும் உதவுகிறது. முக்கியமாக முருங்கையின் இலையை தினமும் சிறிது மென்று உட்கொண்டு வந்தால், முதுமையைத் தள்ளிப் போடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
