Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ஆரோக்கியமான உணவுகள் என்று வரும் போது அதில் பழங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பழங்களில் நிறைந்துள்ளன. இந்த உலகில் கிட்டதட்ட 3000-க்கும் மேற்பட்ட பழங்கள் உள்ளன. பொதுவாக பழங்களின் விலை சில நூறுகளில் தொடங்கி அதிகபட்சமாக சில ஆயிரங்கள் வரை செல்லும். இந்தியாவில் நாம் பழங்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தால் கூட நாம் அதை வாங்காமல் தவிர்த்து விடுவோம்.

சாதாரண மக்களை தலைசுற்ற வைக்கும் விதமாக பல லட்சங்களில் விற்கப்படும் சில உள்ளன. அதுவும் இவை கிலோ கணக்கில் அல்ல, ஒரு பழத்தின் விலையே நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு விற்கப்படுகிறது. இந்த பழங்கள் அவற்றின் சுவை அல்லது தோற்றத்திற்காக அல்லாமல், வியக்கத்தக்க விலைகளுக்காகப் புகழ்பெற்றவையாக உள்ளன. அவற்றின் அரிதான தன்மை, உயர்தரம் மற்றும் தனித்துவமான உற்பத்தி முறைகளுக்குப் பெயர் பெற்ற, உலகின் மிக விலையுயர்ந்த சில பழங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
யுபாரி கிங் முலாம்பழம்
'முலாம்பழங்களின் அரசன்' என்று அழைக்கப்படும் யுபாரி கிங், ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் மட்டுமே பயிரிடப்படுகிறது. அதன் அபாரமான இனிப்புச் சுவை, நறுமணம் மற்றும் சாறு நிறைந்த சதைப்பகுதி ஆகியவற்றிற்காகப் புகழ்பெற்ற இந்த அரிய வகை முலாம்பழங்களின் ஒரு ஜோடி, 25,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய்) வரை விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில் இவை பெரும்பாலும் விலையுயர்ந்த பரிசுகளாக வழங்கப்படுகின்றன.
ரூபி ரோமன் திராட்சை
'ரூபி ரோமன்' திராட்சைகள் உலகின் மிக விலையுயர்ந்த திராட்சை வகைகளில் ஒன்றாகும். இது ஜப்பானில் சாகுபடி செய்யப்படுகிறது. அளவில் பெரியதாகவும், அடர் சிவப்பு நிறத்தில், மிகுந்த இனிப்புச் சுவைகொண்ட இந்த அரிய வகை திராட்சை ஜப்பான் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த திராட்சையின் உயர்தரக் கொத்து ஒன்று சுமார் 8,400 அமெரிக்க டாலர்களுக்கு(இந்த மதிப்பில் 8 லட்சம் ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது. இவ்வகைத் திராட்சைகள் வழக்கமான சந்தைகளை விட, பெரும்பாலும் சிறப்பு ஏலங்கள் மூலமாகவே விற்பனை செய்யப்படுகின்றன.
டென்சுக்கே தர்பூசணி
நாம் பொதுவாக இந்திய சந்தைகளில் பச்சை நிற தர்பூசணியைத்தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த அரிய வகை தர்பூசணி, அதன் தனித்துவமான கருப்பு நிறத் தோலுக்குப் பெயர் பெற்றது. ஜப்பானின் ஹொக்கைடோவில் மட்டுமே பயிரிடப்படும் இது, 6,000 அமெரிக்க டாலர்கள்(5.80 லட்சம் ரூபாய்) வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்படக்கூடியது. இதன் இனிப்பான சுவை மற்றும் அரிதான தன்மை காரணமாக, இது சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு ஆடம்பரப் பழமாகத் திகழ்கிறது.
பிஜெம் துரியன்
பொதுவாக துரியன் பழமென்றாலே மக்கள் மூக்கை மூடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். ஆனால் தாய்லாந்தைச் சேர்ந்த 'பிஜெம் துரியன்' எனும் அரிய வகை துரியன் பழம், அதன் மென்மையான, க்ரீம் போன்ற அமைப்பு மற்றும் தனித்துவமான சுவைக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஒரு சிறப்பு உணவாகக் கருதப்படும் இது, மிகவும் குறைவாகவே கிடைப்பதால் இதன் விலை 2,500 அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் 2.5 லட்சம்) வரை கூட விற்கப்படுகிறது.
ஹெலிகன் அன்னாசி
இங்கிலாந்தில் உள்ள ஹெலிகனின் லாஸ்ட் கார்டனில் விளையும் இந்த அன்னாசிப்பழம், பல ஆண்டுகள் பயிற்சி செய்து செம்மைப்படுத்தப்பட்ட ஒரு சிறப்புமிக்க பாரம்பரிய முறையைப் பயன்படுத்திப் பயிரிடப்படுகிறது. அதன் அபாரமான இனிப்பு மற்றும் தனித்துவமான நறுமணம் காரணமாக அது சுமார் 1500 அமெரிக்க டாலர்(இந்திய ரூபாயில் 1.5 லட்சம்) வரை விற்கப்படுகிறது.
ஹமி முலாம் பழம்
சீனாவின் ஜின்ஜியாங் பகுதியைத் தாயகமாகக் கொண்ட 'ஹமி' முலாம்பழம் மொறுமொறுப்பான தன்மை, அதிக நீர்ச்சத்து மற்றும் அதீத இனிப்புச் சுவைக்கு பெயர் பெற்றது. இதன் தரம் மற்றும் அளவைப் பொறுத்து இதன் விலை 200 முதல் 300 அமெரிக்க டாலர்கள் வரைவிற்கப்படுகிறது. சீனாவில் இது பெரும்பாலும் ஒரு உயர்தரப் பரிசாக வழங்கப்படுகிறது.
தாயோ நோ டமாகோ மாம்பழம்
'சூரியனின் முட்டை' என்று பொருள்படும் பெயரைக் கொண்ட இந்த உயர்தர ஜப்பானிய மாம்பழம், அதன் பிரகாசமான சிவப்பு-ஆரஞ்சு நிறம் மற்றும் முட்டை போன்ற வடிவத்திற்கு புகழ்பெற்றதாக உள்ளது. அதன் இனிப்புச் சுவை மற்றும் தனித்துவமான தோற்றத்திற்குப் பெயர் பெற்ற இது, பொதுவாக 100 முதல் 200 அமெரிக்க டாலர்கள் வரையிலான விலையில் விற்கப்படுகிறது. இதனால் இது உலகின் மிகவும் விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக உள்ளது.



Click it and Unblock the Notifications


