Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
கருப்பான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப கடலை மாவை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: தற்போது வெயில் கொளுத்துவதோடு, மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, சருமத்தை கருப்பாக வெளிக்காட்டுகின்றன. இப்படி சருமத்தில் சேரும் அழுக்குகளை தினமும் முறையாக சுத்தம் செய்து வெளியேற்றாவிட்டால், பின் சருமத்தின் ஆரோக்கியம் பாழாவதோடு, முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கத் தொடங்கிவிடும்.
உங்களின் முகமும் வரவர கருப்பாகிக் கொண்டிருக்கிறதா? இப்படி கருப்பாக மாறியிருக்கும் உங்கள் முகச்சருமத்தை வெள்ளையாக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் எந்த மாற்றமும் சருமத்தில் தெரியவில்லையா?

அப்படியானால் நம் முன்னோர்கள் பழங்காலத்தில் சரும அழகை மேம்படுத்த பயன்படுத்தி வந்த கடலை மாவு கொண்டு பராமரிப்பு கொடுங்கள். இப்படி கடலை மாவு கொண்டு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமத்தின் அமைப்பு மேம்படுவதோடு, சருமத்துளைகள் சுருங்கி, சருமமும் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.
அதோடு கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, உடனடி பொலிவைத் தரும். அதற்கு கடலை மாவைக் கொண்டு சிம்பிளாக ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால் போதும். கீழே சரும நிறத்தை மேம்படுத்த உதவும் சில கடலை மாவு ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கடலை மாவு, எலுமிச்சை சாறு மற்றும் மில்க் க்ரீம் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் பாதி எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம்மை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து முகத்தைக் கழுவ வேண்டும்.
2. கடலை மாவு, பப்பாளி மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கடலை மாவுடன், சிறிது பப்பாளி கூழ் மற்றும் சிறிது ஆரஞ்சு பழச்சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகதைக் கழுவ வேண்டும்.
3. கடலை மாவு, மஞ்சள், தேன், தயிர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. கடலை மாவு, தேன், பாதாம் எண்ணெய், பால் மற்றும் முட்டை பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கடலை மாவு, தேன், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தயிர் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
5. கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றி, முகத்திற்கு உடனடி பொலிவைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
