Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வெயில் காலம் வந்துவிட்டாலே, உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக அதிகப்படியான வியர்வையினால் சருமம் எப்போதும் பிசுபிசுவென்று எண்ணெய் வழிந்தவாறு இருக்கும். சில சமயங்களில் இந்த எண்ணெய் பசையால் சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, முகப்பரு பிரச்சனையாலும் அவதிப்படக்கூடும்.

இந்நிலையில் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கவும், முகப்பரு வராமல் இருக்கவும் ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட வேண்டும். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள அரிசி மாவைக் கொண்டே சரும பிரச்சனைகளைப் போக்கும் பலவிதமான ஃபேஸ் பேக்குகளை போடலாம். ஏனெனில் அரிசி மாவு சரும நிறத்தை அதிகரிக்கவும், வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கவும், முகப்பருக்களுக்கு காரணமான நச்சுக்களை நீக்கவும் பெரிதும் உதவி புரிகிறது. கீழே சருமத்தில் மாயங்களைப் புரியும் ஒருசில அரிசி மாவு ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அரிசி மாவு, மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பால் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* சிறந்த பலனைப் பெற, இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
2. அரிசி மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இன்னும் சிறப்பான பலனைப் பெற, வாரத்திற்கு 1 முறையாவது இந்த ஃபேஸ் பேக்கை போட வேண்டும்.
3. அரிசி மாவு, வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் துருவிய வெள்ளரிக்காயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 2 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. அரிசி மாவு, கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் கடலை மாவு, தக்காளி சாறு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* சிறப்பான பலனைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு பயன்படுத்தலாம்.
5. அரிசி மாவு மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* சிறப்பான பலனைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை தினமும் ஒருமுறை பயன்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

