Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்..
Summer Skin Care Tips In Tamil: ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் வாழைப்பழம். இந்த வாழைப்பம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவது போது, சருமத்திற்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. இதற்கு இதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்றவை தான் காரணம்.

உங்கள் சருமம் இந்த கோடை வெயிலால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால், சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும், சருமத்தை நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் வாழைப்பழத்தைக் கொண்டு பராமரிப்பு கொடுத்தால் போதும்.
அதுவும் வாழைப்பழம் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடுவதன் மூலம், சருமத்திற்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இப்போது வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க் போடுவதால் கிடைக்கும் நன்மைகளையும், எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்பதையும் காண்போம்.
வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்கின் நன்மைகள்
1. சரும வறட்சி தடுக்கப்படும்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இயற்கை எண்ணெய்கள் அதிகம் இருப்பதால், இதைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடும் போது, சருமத்திற்குத் தீவிரமான ஈரப்பதத்தை வழங்கி, சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கிறது.
2. முகப்பருக்கள் தடுக்கப்படும்
வாழைப்பழத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றன. மேலும் சருமம் சிவந்து போவதையும், சருமத்தில் ஏற்படும் அழற்சியையும் குறைத்து, நல்ல பொலிவான சருமத்தை அளிக்கும்.
3. கரும்புள்ளிகள் குறையும்
வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைத்து, சரும நிறத்தைச் சீராக்கவும், பிரகாசமாக்கவும் உதவுகின்றன.
4. முதுமையைத் தடுக்கும்
வாழைப்பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் சருமம் சேதமடைவதைத் தடுக்கவும், செல் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம் முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவது குறையும்.
5. புத்துணர்ச்சியான சருமம்
வாழைப்பழத்தில் சருமத்திற்கு இதமளிக்கும் பண்புகள் உள்ளன. எனவே இது சென்சிடிவ் சருமத்தினருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இது சருமத்தில் ஏற்படும் எரிச்சலை தடுக்க உதவுகிறது மற்றும் இது சருமத்தை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்குகள்
1. பொலிவான சருமத்தைப் பெற...
தேவையான பொருட்கள்:
* கனிந்த வாழைப்பழம் - 1
* தேன் - 1 டீஸ்பூன்
* தயிர் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* இதற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேன் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை மைல்டு கிளென்சர் பயன்படுத்தி கழுவி துடைத்து விட்டு, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* பின் முகத்தை துடைத்துவிட்டு, லைட் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
2. முகப்பரு சருமத்தினருக்கு...
தேவையான பொருட்கள்:
* கனிந்த வாழைப்பழம் - 1
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* வேப்பிலை பவுடர் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் நன்கு கனிந்த வாழைப்பத்தை மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை கிளென்சர் பயன்படுத்தி கழுவி, துடைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் தயாரித்து வைத்துள்ள ஃபேஸ் மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி துடைக்க வேண்டும்.
* இறுதியாக லைட் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



