Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: கோடை வெயிலால் உங்கள் முகம் பொலிவிழந்து உள்ளதா? முகத்தை தொட்டாலே பிசுபிசுவென்று எண்ணெய் வழிந்தவாறு உள்ளதா? கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்தாலே கருப்பாக தெரிகிறீர்களா? இப்படி முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கவும், முகப்பொலிவை அதிகரிக்கவும் கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறீர்களா?

ஆனால் இப்படி கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை கொண்டு பராமரிப்பு கொடுப்பதை விட, நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்தால், சருமம் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். கீழே கோடை வெயிலால் டல்லாக இருக்கும் முகத்தை பொலிவாக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, கருமை போன்றவற்றை நீக்கி, சருமத்தை பொலிவோடும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
2. தேன் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தை புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
3. தக்காளி மற்றும் சர்க்கரை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பாதி தக்காளியை மசித்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகுத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக சுழற்சி முறையில் ஸ்க்ரப் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பளிச்சென்று பிரகாசமாக காட்டும்.
5. வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பாதி வெள்ளரிக்காய் மற்றும் 1 கைப்பிடி புதினாவை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை குளிர்ச்சியாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

