Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Zodiac Signs And Enemies In Tamil: ஒருவருக்கு எதிரிகள் உருவாவது அந்நபரின் குணாதிசயங்களால் இருந்தாலும், ஒருவரது ஜாதகத்தில் 6 ஆம் வீடான சத்ரு ஸ்தானம் மற்றும் 12 ஆம் வீடான மறைமுக எதிரி ஸ்தானம் பலவீனமாக இருந்தால், அந்நபருக்கு எதிரிகளால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஆனால் அதுவே ஒருவரது லக்னாதிபதி வலுவாக இருந்தால், அந்நபர் எப்பேற்பட்ட எதிரிகளையும் சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள்.

ஜோதிடத்தின் படி ஒருவரது குணாதிசயங்களின் அடிப்படையில் சில ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிக்காரர்களை விட நேர்முக மற்றும் மறைமுக எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். இதற்கு அவர்களது கோபம், பேச்சு, பிடிவாத குணம், திமிர் போன்றவை தான் முக்கிய குணங்களாக இருக்கும். இப்போது 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்டவர்கள் தான் மேஷ ராசிக்காரர்கள். இவர்கள் தைரியம், துணிச்சல், வீரம் ஆகியவற்றை கொண்டிருப்பார்கள். அதே சமயம் இவர்களிடம் கோபம், அவசரம், எதையும் முகத்திற்கு நேராக சொல்லும் குணமும் இருக்கும்.
தவறை தட்டிக் கேட்கக்கூடியவர்கள். இவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுவதால், அது பிடிக்காமல் நிறைய பேர் எதிரிகளாக மாறுவார்கள். இருப்பினும் இந்த ராசிக்காரர்கள் எதிரிகளை நேருக்கு நேர் எதிர்க்க சிறிதும் அஞ்சமாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய் தான். சொல்லப்போனால் மற்ற ராசிகளை விட இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தான் நிறைய எதிரிகளை சம்பாதித்து வைத்திருப்பார்கள். இவர்கள் எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். நிறைய ரகசியத்தை தன்னுள் வைத்திருப்பார்கள்.
அசாத்திய தைரியமும், எதையும் சாதிக்கும் பிடிவாத குணமும், மற்றவர்களை பயறுத்துவதோடு, பொறாமையையும் ஏற்படுத்தும். இவர்களுக்கு யாரேனும் துரோகம் செய்தால், அதை மறக்கமாட்டார்கள். முக்கியமாக இவர்களிடம் பழிவாங்கும் குணம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு மறைமுக எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்.
சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே தலைமைப் பண்புகள் அதிகம் இருப்பதால், பணியிடத்தில் பொறுப்புகள் அதிகம் வழங்கப்படும். இதன் காரணமாக பொறாமையால் எதிரிகள் அதிகம் உருவாகுவார்கள்.
எப்போதும் தான் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். சற்று பந்தாவான குணத்தை கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கிடைக்கும் புகழ்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். இதனால் இவர்களின் வளர்ச்சியைத் தடுக்க எதிரிகள் அதிகம் உருவாகுவார்கள்.
மிதுனம் மற்றும் கன்னி
மிதுன ராசியின் அதிபதி புதன். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்களின் பேச்சால் எதிரிகளை சம்பாதிப்பார்கள். அதேப் போல் கன்னி ராசியின் அதிபதியும் புதன் என்பதால், இதே பிரச்சனை தான் இந்த ராசிக்காரர்களுக்கும். மிதுன ராசிக்காரர்கள் இரட்டை தன்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்களால் ரகசியங்களை தங்களுக்குள் வைத்துக் கொள்ளத் தெரியாது.
தங்கள் வாயால் மற்றவர்களிடம் உளறி எதிரிகளை உருவாக்கிக் கொள்வார்கள். அதேப் போல் கன்னி ராசிக்காரர்கள் எதிலும் குறைகளை கண்டுபிடிப்பதோடு, மற்றவர்களிடம் நிறைய வேலை வாங்குவார்கள். பணியிடத்தில் மற்றவர்களை கடுமையாக நடத்துவதால் இவர்களுக்கு அலுவலகத்தில் எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




