Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Ketu Venus Conjunction In Leo 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் பயணிக்கும். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் இந்த சுக்கிரன் ஜூலை 04 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.
இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது ஆகஸ்ட் 01 ஆம் தேதி வரை நீடித்திருக்கப் போகிறது. முக்கியமாக இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரனால் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் கேது-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். முதலீடுகளை செய்யும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப விஷயங்களில் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், சற்று கவனமாக முடிவெடுக்க வேண்டும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும், பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நன்மை கிடைக்கும். இக்காலத்தில் கிடைக்கும் புதிய நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், அதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை கவர்ச்சிகரமானதாக மாறும். அதே சமயம் இந்த சேர்க்கை காலத்தில் சற்று மன குழப்பத்துடனும் இருக்கக்கூடும். உறவுகளிலும் சரி, வேலையிலும் சரி, அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்து வந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் ஆரோக்கிய விஷயத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நண்பர்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உறவுகளில் இருப்பவர்கள் சற்று வெளிப்படையாக இருப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும் மற்றும் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் முழுமையாக சரிபார்த்து, பின் கையெழுத்திட அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சமநிலையைப் பேண வேண்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல தகவல் தொடர்பை பேண அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் எதிரிகளை வெல்வார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். பண வரவு அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுலதோடு, சமச்சீரான உணவையும் உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




