Latest Updates
-
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்..
Muttai Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் மட்டன், சிக்கன் எடுக்க முடியாத நாட்களில் முட்டை குழம்பு செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் முட்டை குழம்பு செய்வீர்களா? இப்படி ஒரே சுவையில் முட்டை குழம்பு செய்து போரடித்துவிட்டதா?

அப்படியானால் ஒருமுறை மசாலா அரைத்து முட்டை குழம்பு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் முட்டை குழம்பு செய்யும் போது, அது மட்டன் குழம்பு போன்ற சுவையில் இருக்கும். இப்படி செய்யும் முட்டை குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த முட்டை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 5-6
* சீரகம் - 2 சிட்டிகை
* பட்டை - 1
* கிராம்பு - 1
* அன்னாசிப்பூ - 1 இதழ்
* கல்பாசி - 1 சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி - 4 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 1
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/4 டீஸ்பூன்
* மட்டன் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* அரைத்த மசாலா
* வேக வைத்த முட்டை - 10
மசாலா அரைப்பதற்கு..
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல்
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* சின்ன வெங்காயம் 1/2 கையளவு
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 1/2 மூடி
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சிறிது தக்காளி
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ இதழ்,
கல்பாசி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 1 கைப்பிடி நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய 4 தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, கசகசா, முந்திரி, சின்ன
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, 1/2 மூடி துருவிய தேங்காய்,
சோம்பு மற்றும் வதங்கிக் கொண்டிருக்கும் தக்காளியில் சிறிது எடுத்து
சேர்த்து, நீரை கொஞ்சம் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் வதங்கிக் கொண்டிருக்கும் தக்காளியுடன் 1 முட்டையை உடைத்து
ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள், மட்டன் மசாலா சேர்த்து கிளறி,
அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது நீரை ஊற்றி கலந்து விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, வேக வைத்த முட்டையை
சேர்த்து பிரட்டி, குழம்புக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து,
குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான முட்டை குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications