Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க..
Mars Transit In Gemini In September 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி செவ்வாய் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்நிலையில் இந்த செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். செவ்வாய் புதனின் ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதைப் பாருங்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக புதிய வேலையை தொடங்க நினைத்திருந்தால், இக்காலம் ஏற்றதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தகவல் தொடர்பு திறன் மேம்படும். இதனால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதோடு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் செப்டம்பரில் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் நல்ல நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியை காண்பார்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், செப்டம்பரில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


