Latest Updates
-
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா?
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க..
Vegetables For Liver Health: நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான மற்றும் மிகப்பெரிய உறுப்பாகும். இந்த கல்லீரல் உடலில் பல முக்கியமான வேலைகளை செய்கிறது. அதில் உடலில் சேரும் கழிவுகளைச் செயலாக்குதல், செரிமானத்திற்கு தேவையான பொருட்களை உருவாக்குதல் மற்றும் ஊட்டச்சத்துக்களைச் செயல்படுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆனால் இந்த கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது பற்றி யாரும் யோசிப்பதில்லை. உடல் எடை, செரிமானம், சர்க்கரை அளவு, பிபி போன்றவற்றில் கவனம் செலுத்தும் மக்கள், தங்களின் கல்லீரல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் கல்லீரல் ஆரோக்கியம் மோசமாக இருந்தாலே பல பிரச்சனைகளை உடலில் சந்திக்க நேரிடும்.
ஒரு நற்செய்தி என்னவெனில், இந்த கல்லீரலை உணவுகள் மூலமாகவே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக ஒருசில காய்கறிகளை உணவில் அடிக்கடி தவறாமல் சேர்த்து வந்தாலே கல்லீரல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி, கல்லீரல் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு வாரமும் தான் உண்ணும் மூன்று காய்கறிகளைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முக்கியமாக இந்த காய்கறிகள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடியவையாகும். இப்போது அந்த காய்கறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. பீட்ரூட்
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முதல் காய்கறி பீட்ரூட். இந்த "பீட்ரூட்டில் பீட்டாலைன்கள் என்னும் சேர்மங்கள் உள்ளன. இவை தான் பீட்ரூட்டின் அடர் சிவப்பு நிறத்திற்கு காரணம். இந்த சேர்மங்களானது உடலினுள் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன" என்று கூறினார். இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உடலில் குறைவாக இருந்தால் கல்லீரலில் ஏற்படும் அழுத்தம் குறைந்து, அதன் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.
2. ப்ராக்கோலி
கல்லீரல் ஆரோக்கியத்திற்காக டாக்டர் சாப்பிடுவதாக கூறிய அடுத்த காய்கறி தான் ப்ராக்கோலி. இந்த ப்ராக்கோலியில் சல்ஃபோராஃபேன் என்ற சேர்மம் உள்ளது. இது கல்லீரலின் இயற்கையான நச்சு நீக்கும் பாதைகளுக்கு ஆதரவளிக்கிறது. எளிமையாக கூற வேண்டுமானால், இது கல்லீரலின் வேலையை சிறப்பாக செய்ய உதவுகிறது. ஒருவேளை ப்ராக்கோலி பிடிக்காவிட்டால், அதன் குடும்பத்தைச் சேர்ந்த முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை உட்கொள்ளலாம். இவையும் ப்ராக்கோலிக்கு இணையான நன்மைகளையே வழங்கும் என்றும் டாக்டர் கூறினார்.
3. பாகற்காய்
பாகற்காய் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவக்கூடியது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது என்று டாக்டர் சேத்தி கூறினார். கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் கொழுப்பு கல்லீரலுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஆகும். இன்சுலின் செயல்பாட்டை ஆதரிப்பது, மறைமுகமாக கல்லீரல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கக்கூடும்.
டாக்டர் சேத்தி கூறுவது போன்று, இந்த காய்கறிகள் ஒரு மாய உணவுகள் அல்ல. ஆனால் இந்த காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், காலப்போக்கில் கல்லீரலில் உள்ள பிரச்சனைகள் சரியாகி, அதன் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு இந்த காய்கறிகளை வாரந்தோறும் ஒருமுறை சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

