Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Mercury Transit In Leo On 22 August 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இவர் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். தற்போது புதன் கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி புதன் சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் செப்டம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார். புதன் சிம்ம ராசிக்குள் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே அந்த ராசியின் அதிபதியான சூரியன் இருப்பார். இதனால் இந்த புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும். இந்த யோகமானது மிகவும் மங்களகரமான யோகமாகும்.
இது ஒருவரது வாழ்வில் பல நல்ல மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும். முக்கியமாக இந்த புதன் பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலும் மேம்படும். இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்கள் நல்ல யோகத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கும். பேச்சுத்திறன் மேம்படும். இந்த பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வணிகம், மார்கெட்டிங், கல்வி, எழுத்து போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாகவும், முன்னேற்றத்தைத் தரும் காலமாகவும் இருக்கும். முக்கியமாக வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையும், தலைமைத்துவ திறன்களும் வலுவடையும். பேசும் விதத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும். அதோடு, பணியிடத்தில் உங்களின் பேச்சுக்கு முக்கியத்துவம், மரியாதையும் கொடுப்பார்கள். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால் நல்ல நிலையை அடைவீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நேர்மறையான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய நட்புகளால் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்கவோ அல்லது வேலை செய்யவோ விரும்பினால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த வணிகர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பேச்சால் பல புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சட்ட விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


