Latest Updates
-
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Pattani Rice With Kathirikkai Gravy Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் சாதம் செய்து, அதற்கு சாம்பார், குழம்பு, பொரியல், வறுவல் என்று செய்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக அதே சமயம் ருசியான மதிய உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் செய்து சாப்பிடுங்கள். இந்த சாதம் ருசியாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். இந்த சாதத்தை பிள்ளைகளுக்கு லன்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இதனால் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த பச்சை பட்டாணி சாதம், கத்திரிக்காய் கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி சாதம், கத்திரிக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
அரைப்பதற்கு...
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* கிராம்பு - 3
* ஜாவித்திரி - 1
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 10
* பச்சை மிளகாய் - 4
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தண்ணீர் - சிறிது
சாதம் தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ- 1
* பிரியாணி இலை - 2
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* பச்சை பட்டாணி - 1 கப்
* தேங்காய் பால் - 1 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - தேவையான அளவு
* ஊற வைத்த பாசுமதி அரிசி
கத்திரிக்காய் கிரேவிக்கு...
அரைப்பதற்கு...
* பூண்டு - 1
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 4
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7
* தயிர் - 1/2 கப்
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
கிரேவிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிஞ்சு கத்திரிக்காய் - 400 கிராம் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வதக்கிய கத்திரிக்காய்
* தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாவித்திரி,
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி
ஆகியவற்றை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெங்காயத்தை சேர்த்து லேசாக நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை நீங்கி நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 கப் பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தேங்காய் பால் மற்றும் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, ஊற வைத்துள்ள அரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து
கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான பட்டாணி சாதம்
தயார்.
* அடுத்து கிரேவி செய்வதற்கு மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை
மிளகாய், வெங்காயம், சீரகம், மிளகு, முந்திரி, தயிர், கொத்தமல்லி
ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி, ஒரு தட்டில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போய், நிறம்
மாறியதும், அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து கிளறி, 3/4 கப் நீரை
ஊற்றி கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால்,
கத்திரிக்காய் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications