Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சப்பாத்திக்கு பச்சை பட்டாணி வெச்சு இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. கறிக்குழம்பே தோத்துப்போகும்..
Green Peas Gravy Recipe In Tamil: இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா?
உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு வீடே மணக்கும் அளவில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி கறிக்குழம்பே தோற்றுப் போகும் அளவில் மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக இது சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பட்டாணி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 2 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* புதினா இலைகள் - 4
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 4 சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், கிராம்பு,
பட்டை, அன்னாசிப்பூ, கசகசா, மிளகு, சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து
நல்ல மணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் புதினா இலைகள், துருவிய தேங்காய், பூண்டு, இஞ்சி
சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின்
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அதோடு பச்சை பட்டாணியையும்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை
ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான பச்சை
பட்டாணி கிரேவி தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











