Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
Mars Rise In Pisces On 18 April 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் தற்போது செவ்வாய் கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய் ஏப்ரல் 02 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைவால். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 18 ஆம் தேதி செவ்வாய் உதயமாகவுள்ளார். இப்படி செவ்வாய் உதயமாவதால், செவ்வாயின் பலம் அதிகரித்து, அதன் விளைவாக சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பாகவும் வலுவாகவும் இருந்தால், அந்நபர் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். ஒவ்வொரு வேலையும் சிறப்பாக முடிவடையும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். இப்போது ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் மீன ராசியில் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தைரியமும், வீரமும் இருமடங்கு அதிகரிக்கும். இதுவரை சந்தித்து வந்த உடல் சோர்வு நீங்கும். இனிமேல் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அவரது உடல்நலம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
