Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...!
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்!
Peerkangai Paruppu Masiyal Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காயை வைத்து சூப்பரான பருப்பு மசியல் செய்யுங்கள். இந்த பக்குவத்தில் பீர்க்கங்காயை சமைக்கும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
கோடைக்காலத்தில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். அப்படி நீர்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி தான் பீர்க்கங்காய். இந்த பீர்க்கங்காய் பருப்பு மசியல் செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த கூட்டு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், பீர்க்கங்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு பீர்க்கங்காய் பருப்பு மசியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் பருப்பு மசியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு வேகவைக்க:
- 1/2 கப் துவரம்பருப்பு
- ஒன்றரை கப் தண்ணீர்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய்
பருப்பு மசியல் செய்ய:
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 5 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
- 1/4 கப் சின்ன வெங்காயம் (நறுக்கியது)
- 3 கப் பீர்க்கங்காய் (தோல் சீவி, நறுக்கியது)
- 2 தக்காளி (நறுக்கியது)
- 1 ஸ்பூன் உப்பு
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- சிறிதளவு புளி
- தேவையான அளவு தண்ணீர்
- 1/2 ஸ்பூன் வெல்லம்
- 2 கொத்து கொத்தமல்லி இலைகள்
தாளிக்க:
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 6 பல் பூண்டு
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் பெருங்காயம்
- 3 வர மிளகாய்
செய்முறை:
- கழுவிச் சுத்தம் செய்த துவரம்பருப்பைப் பிரஷர் குக்கரில் போடவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும். குக்கரை மூடி, பருப்பை 4 விசில் வரும் வரையோ வேகவிடவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, குக்கருக்குள் இருக்கும் அழுத்தம் தானாகவே தணியும் வரை காத்திருக்கவும். குக்கரைத் திறந்து, பருப்பை நன்கு மசித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, அதில் வெந்தயத்தைச் சேர்க்கவும். பின்னர் பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சின்ன வெங்காயம் பொன்னிறமாகி மென்மையாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி மற்றும் தோல் சீவி நறுக்கிய பீர்க்கங்காயைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும்.
- பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒரு சிறிய துண்டு புளியைச் சேர்த்து ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.
- கடாயை ஒரு மூடியால் மூடி, தக்காளி நன்கு குழைந்து வரும் வரை 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும். ஒரு பருப்பு மத்தை வைத்து இந்த கலவையை மெதுவாக மசிக்கவும்.
- பின்னர் 1 கப் தண்ணீர் மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும். இந்த நிலையில் கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்து, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்கு கிளறவும்.
- பின்னர் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, 5 நிமிடங்கள்மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெயை சூடாக்கி, பூண்டைச் சேர்க்கவும். மிதமான தீயில் வதக்கவும். பூண்டு இலேசான பொன்னிறத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். கடுகு வெடித்ததும், வர மிளகாயைச் சேர்த்து வத க்கவும்.
- மிளகாய் நிறம் மாறியதும், இந்த தாளிப்பை வேக வைத்த பருப்பில் கொட்டி நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான பீர்க்கங்காய் பருப்பு மசியல் ரெடி. இதை சாதத்தில் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











